இன்றைய ராசி பலன் 10.12.2021

மேஷம்: அசுவினி: தாயாரின் உடல்நலனில் இருந்த சிறு தொந்தரவுகள் சரியாகும்.
பரணி: உங்களின் நல்ல செயல்கள் மூலம் நல்லோரின் ஆசி கிடைக்கும்.
கார்த்திகை 1 கவலை தீரும். குடும்ப ஒற்றுமை சீராக காணப்படும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: அரசுப்பணியாளர்களுக்கு நன்மைகள் நடக்கும். மகிழ்ச்சி கூடும்.
ரோகிணி: வாழ்வில் உயர்வு வரும். உங்களின் நீண்ட நாள் கோரிக்கை ஒன்று நிறைவேறும்.
மிருகசீரிடம் 1,2: மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: நல்ல செயல்களை செய்து பிறரிடம் பாராட்டு பெறுவீர்கள்.
திருவாதிரை: மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். எதிர்பாராத பணவரவு உண்டு.
புனர்பூசம் 1,2,3: உங்களின் கூடுதல் முயற்சியால் பொருளாதார வசதிகள் மேம்படும்.

கடகம்: புனர்பூசம் 4: சமூகத்தில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பீர்கள்.
பூசம்: இன்று பேச்சிலும் செயலிலும் கவனமாக இருந்தால் பிரச்னை வராது.
ஆயில்யம்: திறமையுடன் புதிய விஷயங்களை கற்று சிறப்படைவீர்கள்.

சிம்மம்: மகம்: பொதுநல விஷயத்தில் ஈடுபட்டு பாராட்டைப் பெறுவீர்கள்.
பூரம்: எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வழக்குகளில் இருந்த தேக்க நிலை மாறும்.
உத்திரம் 1: வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வீர்கள். மகிழ்ச்சி கூடும்.

கன்னி: உத்திரம் 2,3,4: நீண்ட நாள் பிரச்னை தீரும். மனதில் நல்லெண்ணம் மேலோங்கும்.
அஸ்தம்: உடல்நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உங்களிடம் உதவி கேட்பார்கள்.
சித்திரை 1,2: நண்பர் ஒருவர் மூலம் எதிர்பாராத நன்மை ஒன்று ஏற்படக்கூடும்.

துலாம்: சித்திரை 3,4: அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். மனதைரியம் அதிகரிக்கும்.
சுவாதி: வாழ்க்கைத்துணையை அனுசரித்து செல்வது நல்லது. வருமானம் திருப்தி தரும்.
விசாகம் 1,2,3: வாழ்க்கைத்துணையின் முயற்சியால் உங்களின் சங்கடம் ஒன்று தீரும்.

விருச்சிகம்: விசாகம் 4: உங்களின் முயற்சியால் சிரமம் ஒன்றிலிருந்து விடுபடுவீர்கள்.
அனுஷம்: வாழ்க்கைத்துணைக்காக செலவுகள் செய்யவேண்டி வரும்.
கேட்டை: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனதில் உற்சாகம் கூடும்.

தனுசு: மூலம்: மன நிம்மதி கூடும். சகோதரரால் ஆதாயம் உண்டாகும்.
பூராடம்: அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
உத்திராடம் 1: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள்.

மகரம்: உத்திராடம் 2,3,4: நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். எதிலும் பொறுமையை கடைப்பிடியுங்கள்.
திருவோணம்: மற்றவர்களிடம் பேசும்போது நிதானத்தை இழக்க வேண்டாம்.
அவிட்டம் 1,2: இன்று காலையில் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

கும்பம்: அவிட்டம் 3,4: உறவினர்களால் சிறிய செலவும், நன்மையும் ஏற்படும்.
சதயம்: சுபச்செலவுகளால் கையிருப்பு குறையும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பூரட்டாதி 1,2,3: வேலை பற்றிய முக்கிய முடிவுகளை இன்று எடுப்பதை தவிர்ப்பது நல்லது

மீனம்: பூரட்டாதி 4: நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். சேமிப்பில் ஆர்வம் கூடும்.
உத்திரட்டாதி: உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவும்.
ரேவதி: வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்