இன்றைய ராசி பலன் 08.10.2021

மேஷம்: அசுவினி: நல்ல விஷயம் ஒன்று முடிவாகலாம். உற்சாகம் கூடுதலாகும்.
பரணி: சிறு வருமானம் உண்டு. பழைய நண்பர்கள் சந்திப்பு ஏற்படும்.
கார்த்திகை 1: பரபரப்பான நாள். முக்கியமானவர்களை சந்திப்பீர்கள்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: அதிர்ஷ்டம் காரணமாக முதலீடு லாபம் தரும்.
ரோகிணி: நம்பிக்கைக்குரிய நண்பர்கள் மூலம் நன்மை ஒன்று ஏற்படும்.
மிருகசீரிடம் 1,2: உழைப்பு அதிகரித்தாலும் உற்சாகம் குறையாது.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: குடும்பப் பிரச்னை ஒன்று முடிவுக்கு வரும்.
திருவாதிரை: வீட்டிற்கு தேவையான பொருள் ஒன்றை வாங்கி மகிழ்வீர்கள்.
புனர்பூசம் 1,2,3: தாமதப்பட்ட நல்ல விஷயம் ஒன்று தீர்மானிக்கப்படும்.

கடகம்: புனர்பூசம் 4: வெளியூர் செல்லும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும்.
பூசம்: தாயின் உடல்நலம் பற்றி இருந்து வந்த கவலை நீங்கும்.
ஆயில்யம்: அக்கம் பக்கத்தினருடன் இருந்து வந்த தகராறு அகலும்.

சிம்மம்: மகம்: அலுவலகத்தில் புதிய திருப்பங்கள் ஏற்படும். சிறு ஆதாயம் உண்டு.
பூரம்: விருந்து உண்பீர்கள். எதிர்ப்புகள் பற்றி கவலைப்பட வேண்டாம்.
உத்திரம் 1: வீடு மாற்றம், அலுவலக மாற்றம் ஏற்படக்கூடும்.

கன்னி: உத்திரம் 2,3,4: சிறு தடைகளும் தாமதங்களும் நீங்கி நிம்மதி வரும்
அஸ்தம்: உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காத குறை இன்று நீங்கும்.
சித்திரை 1,2: பணியிடத்தில் நீங்கள் விரும்பியபடி பொறுப்பு மாற்றப்படலாம்.

துலாம்: சித்திரை 3,4: முன்னேற்றத்தில் இருந்து வந்த தடைகள் விலகும்.
சுவாதி: தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். நண்பர்கள் உதவி செய்வர்.
விசாகம் 1,2,3: பெண்கள் குழந்தைகள் நலனில் மிகுந்த அக்கறை கொள்வர்.

விருச்சிகம்: விசாகம் 4: பணியாளர்களுக்கு பரிசீலனையில் இருந்த பதவி உயர்வு கிடைக்கலாம்.
அனுஷம்: முன்னேற்றம் கூடும். கொடுக்கல், வாங்கல் திருப்தி தரும்.
கேட்டை: கவலை ஒன்று தீரும். வெளிநாட்டிலிருந்து நன்மை வரும்.

தனுசு: மூலம்: பல காலமாக மனதில் இருந்த பயம் ஒன்று தீரும்.
பூராடம்: குடும்ப சூழல் திருப்தி தரும். நண்பர்கள் ஒற்றுமை பலப்படும்.
உத்திராடம் 1: குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு நெருங்கும்.

மகரம்: உத்திராடம் 2,3,4: விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
திருவோணம்: குடும்பத்தினர் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வர்.
அவிட்டம் 1,2: பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த கசப்பை நீக்குவீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3,4: ஆரோக்கியத் தொல்லை நீங்கும். எதிலும் நிதானப்போக்கு இருக்கும்
சதயம்: உறவினரிடம் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பூரட்டாதி 1,2,3: தந்தையால் இருந்து வந்த சில பிரச்னைகள் அகலும்.

மீனம்: பூரட்டாதி 4: வாகனப் பழுதுகளால் மனதில் ஏற்பட்ட வாட்டம் நீங்கும்.
உத்திரட்டாதி: மற்றவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.
ரேவதி: அவசரப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருந்தால் இனிய நாளாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்