இன்றைய ராசி பலன் 08.03.2022

மேஷம்: அசுவினி: எதையும் மிகுந்த கவனத்துடன் செய்து பலன் அடைவீர்கள்.
பரணி: பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
கார்த்திகை 1: கணவருக்கு உதவி செய்து பாராட்டு பெறுவீர்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: பயணத்திட்டம் ஒன்றை தீட்டுவீர்கள். பிறருக்கு ஆலோசனை சொல்வீர்கள்.
திருவாதிரை: நண்பர்களுடன் மனம்விட்டு பேசி பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள்.
புனர்பூசம் 1,2,3: நெருக்கமான ஒருவருக்குத் தேவையானவற்றை வாங்குவீர்கள்.

கடகம்: புனர்பூசம் 4: செலவுக்கேற்ற வருமானம் வரும். தேவையற்ற பயம் வேண்டாம்.
பூசம்: மனைவிக்கும், மகளுக்கும் ஆபரணங்கள் வாங்கி கொடுத்து மகிழ்விப்பீர்கள்.
ஆயில்யம்: தந்தையின் செயல் ஒன்று உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

சிம்மம்: மகம்: ஆன்மிக நாட்டம் கூடும். வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள்.
பூரம்: பணியாளர்கள் மேலிடத்தின் பாராட்டுதலை பெறுவார்கள்.
உத்திரம் 1: செலவைக் குறைத்து சேமிப்பை அதிகரிப்பதில் முயற்சி செய்வீர்கள்.

கன்னி: உத்திரம் 2,3,4: திருமணம் பற்றிய முயற்சியில் அவசரம் காட்ட வேண்டாம்.
அஸ்தம்: பிறரை அனுசரித்து செல்வதுதான் உங்கள் முன்னேற்றத்திற்கு நல்லது.
சித்திரை 1,2: வேலைப்பளு இருந்தாலும் சகஊழியர்களுக்கு உதவுவீர்கள்.

துலாம்: சித்திரை 3,4: எதிர்காலம் பற்றிய முனைப்பான சிந்தனை இன்று மேலோங்கும்.
சுவாதி: கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
விசாகம் 1,2,3: காதலர்கள் இடையே இருந்து வந்த சிறு சண்டை நீங்கும்.

விருச்சிகம்: விசாகம் 4: உறவினர் இடையே இருந்த பிரச்னை தீரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
அனுஷம்: பெற்றோருக்குப் பணம் வரும். பிறரை புரிந்து கொள்வீர்கள்.
கேட்டை: திட்டமிட்டிருந்த விஷயம் ஒன்று எதிர்ப்புக்குப் பின் நிறைவேறும்.

தனுசு: மூலம்: நீங்கள் உண்மையாகச் செய்த செயல்கள் நன்மை தரும்.
பூராடம்: மற்றவர்கள் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
உத்திராடம் 1: குடும்பத்தில் சிறிய மனவருத்தங்கள் வந்து போகும்

மகரம்: உத்திராடம் 2,3,4: மகன், மகள் மூலம் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
திருவோணம்: குழந்தைகளின் மூலம் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.
அவிட்டம் 1,2: உறவுகளால் நன்மை உண்டு: தந்தையின் உடல்நலம் மேம்படும்

கும்பம்: அவிட்டம் 3,4: பொழுதுபோக்குகளில் ஆர்வம் ஏற்படும். பணிகளில் கவனம் தேவை.
சதயம்: உடல்நலனில் கவனம் தேவை. எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். மகிழ்ச்சி கூடும்.

மீனம்: பூரட்டாதி 4: குடும்பத்திற்காக செலவுகள் செய்து அவர்களது அன்பை பெறுவீர்கள்.
உத்திரட்டாதி: தீயோரிடம் இருந்து விலகி நிம்மதி அடைவீர்கள்.
ரேவதி: நல்ல மனம் கொண்ட உறவினர்களால் சந்தோஷம் கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்