இன்றைய ராசி பலன் 08.0.2022

மேஷம்: அசுவினி : பொழுதுபோக்கு, கேளிக்கைகளில் இன்று பொழுதைக்கழிப்பீர்கள்.
பரணி : தாய்வழி உறவினர்களால் சில நெருக்கடி தோன்றும். மனஅழுத்தம் வேண்டாம்.
கார்த்திகை1 : உங்கள் கவனக்குறைவால் சில இழப்பு உண்டாகும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : உறவினர்கள் வருகை, விருந்து என்று மகிழ்வீர்கள்.
ரோகிணி : உங்களுடைய நீண்டநாள் எண்ணம் ஒன்று இன்று நிறைவேறும்.
மிருகசீரிடம் 1, 2 : ஆலய தரிசனம், குலதெய்வ வழிபாடு செய்து வருவீர்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 : குடும்பத்தில் ஒருவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
திருவாதிரை : தாய்வழி உறவுகளின் ஆதரவால் நினைத்ததை அடைவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3 : குடும்பத்தில் திருப்தியான நிலை உண்டாகும்.

கடகம்: புனர்பூசம் 4 : உங்கள் மனம் சொல்கிறபடி செயல்பட்டு மகிழ்வீர்கள்.
பூசம் : உங்களுக்கு புதிய சிந்தனை மேலோங்கும்.
ஆயில்யம் : நீங்கள் எதிர்பார்த்த வெற்றியை இன்று அடைவீர்கள்.

சிம்மம்: மகம் : உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்னை விலகும்.
பூரம் : மனதிற்குப் பிடித்த செயல்களில் ஆர்வமாக ஈடுபடுவீர்கள்.
உத்திரம் 1 : துணிச்சலுடன் ஒரு செயலில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 : நினைத்ததை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
அஸ்தம் : குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடத்துவது பற்றி ஆலோசிப்பீர்கள்.
சித்திரை 1, 2 : இதுவரையில் இழுபறியாகவே இருந்து வந்த பிரச்னை முடிவிற்கு வரும்.

துலாம்: சித்திரை 3, 4 : வேற்றுமொழி நண்பர்களால் சந்தோஷம் உண்டாகும்.
சுவாதி : உங்கள் கவனக்குறைவால் சில பிரச்னைகளை எதிர்கொள்வீர்கள்.
விசாகம் 1, 2, 3 : தொழிலை விரிவு படுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

விருச்சிகம்: விசாகம் 4 : பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட சங்கடங்கள் ஒரு முடிவிற்கு வரும்.
அனுஷம் : தாய்வழியில் இருந்து தகவல் வரும்.நட்பு வட்டம் விரிவடையும்.
கேட்டை : சகோதரர்களின் துணையுடன் நினைத்ததை அடைவீர்கள்.

தனுசு: மூலம் : நெருக்கடியில் இருந்து இன்று சாமர்த்தியமாக மீண்டு வருவீர்கள்.
பூராடம் : அலைச்சல், வீண் விரயம் ஏற்ப்பட்டாலும் நன்மை ஏற்படும்.
உத்திராடம் 1 : காத்திருந்த செயலில் ஏமாற்றம் ஏற்படும். விழிப்புணர்வு தேவை.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 : உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.
திருவோணம் : குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.
அவிட்டம் 1, 2 : நண்பர்களின் ஆலோசனையால் புது முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3, 4 : எதிரிகளால் உண்டான பிரச்னை தீரும்.நிம்மதி ஏற்படும் நாள்.
சதயம் : நினைத்ததை சாதிப்பதற்காக புதிய வழிமுறைகளைக் கையாளுவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : உடல் நலனில் கவனம் தேவை. தர்ம சிந்தனை அதிகரிக்கும்.

மீனம்: பூரட்டாதி 4 : படிப்பு, திருமணம் என்ற முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
உத்திரட்டாதி : தந்தைவழி உறவுகளுடன் இருந்த பிரச்சனைகள் விலகும்.
ரேவதி : பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த செயல்களில் யோசிப்பீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்