இன்றைய ராசி பலன் 07.0.2022

மேஷம்: அசுவினி : தேவையற்ற பயம் வந்து நீங்கும், உடல் நலனில் கவனம் தேவை.
பரணி : உங்கள் செயல்களில் கூடுதல் கவனம் தேவைப்படும்.
கார்த்திகை 1 : மற்றவர்கள் மூலம் இன்று உங்களுக்கு சிறு சங்கடம் உண்டாகலாம்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : நீங்கள் நினைத்திருந்த செயலில் வெற்றி உண்டாகும்.
ரோகிணி: நீண்ட நாட்களாக எண்ணியிருந்த செயல் நடந்தேறும்.
மிருகசீரிடம் 1, 2 : வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 : கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் திணறுவீர்கள்.
திருவாதிரை : நினைத்த செயலில் வெற்றிபெற கடுமையான முயற்சி மேற்கொள்வீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3 : வெளிமாநில, வெளிநாட்டுத் தொடர்புகள் லாபத்தை உண்டாக்கும்.

கடகம்: புனர்பூசம் 4 : மனதில் பலவிதமான எண்ணங்கள் ஏற்பட்டு குழப்பம் உண்டாகும்.
பூசம் : ஆரோக்யத்தில் இருந்த குறைபாடு அகலும். நிம்மதி ஏற்படும் நாள்.
ஆயில்யம் வீடு கட்டுதல், திருமணம் குறித்த சிந்தனை உண்டாகும்.

சிம்மம்: மகம் : மனதிற்குப் பிடித்த செயல்களில் ஈடுபட்டு மகிழ்வீர்கள்.
பூரம் : எதிர்பார்த்தவற்றில் இன்று சந்தோஷம் காண்பீர்கள்.
உத்திரம் 1 : எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 : நேற்றைய எதிர்பார்த்த செயல் ஒன்று இன்று நிறைவேறும்.
அஸ்தம் : நீங்கள் விரும்பிய செயலில் ஈடுபட்டு மகிழ்வீர்கள்.
சித்திரை 1, 2 : குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள்.

துலாம்: சித்திரை 3, 4 : தெளிவுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.
சுவாதி: உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்னை அகலும்.
விசாகம் 1, 2, 3 : உங்கள் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

விருச்சிகம்: விசாகம் 4 : தந்தை வழி சொத்துகளில் இருந்து வந்த தடை விலகும்.
அனுஷம் : புதிய சொத்துகள் வாங்கும் முயற்சியை மேற்கொள்வீர்கள்
கேட்டை : வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை இன்று அடைவீர்கள்.

தனுசு: மூலம் : நம்பிக்கையுடன் எதிர்பார்த்த ஒன்றில் ஏமாற்றம் மிஞ்சும்.
பூராடம் : இன்று செயல்படுத்தும் செயல்களில் தடை, தாமதம் ஏற்படும்.
உத்திராடம் 1: திடீர் பயணங்கள் உண்டாகும்.மகிழ்ச்சியான நாள்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 : குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் இன்று விலகும்.
திருவோணம்: நண்பர்களால் உங்கள் செயல் விரைவாக நிறைவேறும்.
அவிட்டம் 1, 2 : நீங்கள் குடும்ப முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3, 4 : உங்கள் விருப்பம் நிறைவேறும். மகிழ்ச்சி கூடும் நாள்.
சதயம் : புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : எதிரிகள் தங்கள் தவறை உணர்ந்து உங்களிடம் சரணடைவார்கள்.

மீனம்: பூரட்டாதி 4 : புதிய முயற்சிகளில் இழுபறி உண்டாகும். மன அழுத்தம் வேண்டாம்.
உத்திரட்டாதி : உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள முயற்சி மேற்கொள்வீர்கள்.
ரேவதி : எதிர்பார்த்த செயல்களில் தடை, தாமதம் உண்டாகி பின்னர் நிறைவேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்