இன்றைய ராசி பலன் 04.03.2022

மேஷம்: அசுவினி: மேலதிகாரிகள் மூலம் உதவிகள் கிடைத்து மகிழ்வீர்கள்.
பரணி: எதிர்பாராத நன்மை ஒன்றை அடைய வாய்ப்பு உள்ளது.
கார்த்திகை 1: பணத்தேவை ஒன்று உடனடியாகப் பூர்த்தியாகும்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: பணியில் இருந்த அழுத்தங்கள் விலகி நிம்மதி அடைவீர்கள்.
ரோகிணி: நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி கிடைக்கும்.
மிருகசீரிடம் 1,2: வாழ்வில் முன்னேறுவதற்கான வாய்ப்பு ஒன்று கிடைக்கும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: எதிர்பாராத உதவி ஒன்று கிடைக்கும். சுப விசேஷம் உறுதியாகும்.
திருவாதிரை: குடும்பத்தில் அமைதி நிலவும். பதவி உயர்வு கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: நீண்ட கால பிரச்னைகளை பேசி தீர்க்க வாய்ப்புகள் உண்டாகும்.

கடகம்: புனர்பூசம் 4: உணவில் கவனம் தேவை. நட்பு வட்டம் விரியும்.
பூசம்: எந்த விஷயம் பற்றியும் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
ஆயில்யம்: பழைய பிரச்னை ஒன்று தீர்க்கப்படும். பேச்சினால் நன்மை வரும்.

சிம்மம்: மகம்: பணியிடத்தில் பிறரிடம் தேவையற்ற கடுமை காட்ட வேண்டாம்
பூரம்: பலகாலம் எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும்.
உத்திரம் 1: தாய்வழி உறவுகளின் அன்பும், பாசமும் கிடைக்கப் பெறுவீர்கள்

கன்னி: உத்திரம் 2,3,4: யாரிடமும் கோபப்படாத படி பொறுமையாக இருங்கள்.
அஸ்தம்: குடும்பத்தினரிடையே புரிதல் அதிகரிக்கும். பழைய கவலை நீங்கும்.
சித்திரை 1,2: அதிக கவனம்தேவை. கோபத்தைக்கட்டுப் படுத்த வேண்டும்

துலாம்: சித்திரை 3,4: பொறுமையுடன் முயன்று வெற்றி இலக்கை நெருங்குவீர்கள்.
சுவாதி: நீங்கள் முயற்சித்த விஷயம் சரியாக நடக்கவில்லை என்ற கவலை தீரும்.
விசாகம் 1,2,3: சிறு உதவி கிடைக்கும் .நண்பர் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

விருச்சிகம்: விசாகம் 4: புதிய முயற்சி ஒன்றைக் கையாண்டு வெற்றி பெறுவீர்கள்.
அனுஷம்: முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிக ஈடுபாடு வரும்.
கேட்டை: சுபச்செய்தி வந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும்

தனுசு: மூலம்: கருணைச் செயல்களால் மற்றவர்களின் ஆசியைப் பெறுவீர்கள்.
பூராடம்: தனித்திறமையால் உறுதியுடன் செயல்பட்டு வெற்றியை நெருங்குவீர்கள்.
உத்திராடம் 1: நல்லவர் உதவியால் நீண்ட நாள் முயற்சி ஒன்று சாதகமாக முடியும்.

மகரம்: உத்திராடம் 2,3,4: நெருங்கிய உறவினர் மூலம் நன்மை தரும் செய்தி கிடைக்கும்
திருவோணம்: தந்தையின் உடல் ஆரோக்யம் நல்லபடியாக இருக்கும்.
அவிட்டம் 1,2: மகன், மகள் திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம்: அவிட்டம் 3,4: பணியாளர்கள் சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்கும்.
சதயம்: மனநிம்மதி உண்டு. சோம்பலை கைவிடுவது நல்லது.
பூரட்டாதி 1,2,3: காலதாமதம் இல்லாமல் பரபரப்பாகப் பணிசெய்வீர்கள்.

மீனம்: பூரட்டாதி 4: நற்செயலால் மனம் நிறைவடையும். எதிர்பார்த்த கடன் உதவியைப் பெறுவீர்கள்.
உத்திரட்டாதி: பிறரது பிரச்னைகளை தீர்த்து அவர்களது அன்பை பெறுவீர்கள்.
ரேவதி: வருமானம் உயரும். வேலை பளுவைக் குறைக்க வழியை அறிவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்