இன்றைய ராசி பலன் 03.03.2022

மேஷம்: அசுவினி: உறவினருடன் சமீபத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் அகலும்.
பரணி: முன்னேற்றப் பாதையில் அடி எடுத்து வைப்பீர்கள்.
கார்த்திகை 1: சுபநிகழ்ச்சி பற்றிய செய்திகள் உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: தன்னம்பிக்கையால் சாதிப்பீர்கள். கலகலப்பான நாள்.
ரோகிணி: தொழில் முன்னேற்றம் ஓரளவுக்கு உண்டு. பயம் நீங்கும்.
மிருகசீரிடம் 1,2: தன் பயத்தை கைவிட்டு சாதனைக்கு முயல்வீர்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: அரசியல்வாதி ஒருவருடன் இன்று ஏற்படும் நட்பு பயன் தரும் .
திருவாதிரை: மனதுக்குப்பிடித்தவரின் மன நிறைவால் மகிழ்ச்சி வந்து சேரும்.
புனர்பூசம் 1,2,3: உங்களது தேவைகள் சிறு முயற்சியில் நிறைவடையும்.

கடகம்: புனர்பூசம் 4: குடும்பத்தினரின் செயல்பாடுகள் மனதிற்கு நிறைவு தரும்.
பூசம்: முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கு நிறையப் பாடுபடுவீர்கள்.
ஆயில்யம்: புதிய மனிதர்களை நம்பி எதையும் பேச வேண்டாம்.

சிம்மம்: மகம்: உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும் .
பூரம்: புதியவரை நம்பிச் செயல்பட்ட விஷயம் நல்ல முடிவிற்கு வரும் .
உத்திரம் 1: உறவினர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.

கன்னி: உத்திரம் 2,3,4: எதிர்பார்த்த செய்தி கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
அஸ்தம்: பல நாள் எதிர்பார்ப்பு ஒன்று இனிதே நிறைவேறும்.
சித்திரை 1,2: உங்களுடைய வெளிவட்டாரப் பயணம் உறுதியான தகவலை தரும்.

துலாம்: சித்திரை 3,4: மனதிற்கு பிரியமான சிலரை சந்திப்பீர்கள். மனச்சோர்வு நீங்கும்.
சுவாதி: எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றிகரமாக நடை போடுவீர்கள்.
விசாகம் 1,2,3: இன்று உறவினரிடம் பேசுவதால் மனதில் இருந்த சுமை குறையும்

விருச்சிகம்: விசாகம் 4: நெருங்கிய நண்பர் ஒருவர் உங்கள் தேவையை பூர்த்தி செய்யலாம்.
அனுஷம்: பணியிட மாற்றம் உறுதி ஆகலாம். உடல்நலம் மேம்படும்.
கேட்டை: மனதில் ஏற்பட்டிருந்த படபடப்பு நீங்கும். குழந்தைகள் வெற்றி அடைவர்.

தனுசு: மூலம்: எதிலும் அவசரம் வேண்டாம். வார்த்தைகளை கவனமாகக் கையாளுங்கள்.
பூராடம்: பெற்றோரால் சங்கடம் ஏற்பட்டாலும் நன்மையும் உண்டாகும்.
உத்திராடம் 1: சொத்து வாங்கும் விஷயத்தில் யோசித்து முடிவு எடுங்கள்.

மகரம்: உத்திராடம் 2,3,4: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருவோணம்: எதையும் நிதானித்து செய்வீர்கள். மனதிடம் அதிகரிக்கும்.
அவிட்டம் 1,2: வேற்று மொழி பேசுபவரால் நன்மை காண்பீர்கள்.

கும்பம்: அவிட்டம் 3,4: நீங்கள் நல்ல நோக்கத்துடன் செய்யும் செயலை பிறர் விமர்சிப்பர்.
சதயம்: சகோதர, சகோதரிகளால் முன்பு ஏற்பட்ட கவலை நீங்கும்.
பூரட்டாதி 1,2,3: உடல் ஆரோக்யத்தில் சிறு தொல்லை ஏற்பட்டு மறையும்.

மீனம்: பூரட்டாதி 4: தொழில் செய்பவர்கள் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
உத்திரட்டாதி: உற்சாக மனதுடன் பணியாற்றுவீர்கள். பிறரிடம் பாராட்டு பெறுவீர்கள்.
ரேவதி: செலவுகளை குறைக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்