இன்றைய ராசி பலன் 03.0.2022

மேஷம்: அசுவினி : அந்நிய நபர்களின் வழியே உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பரணி : உங்களுடைய முயற்சிகளால் லாபமடைவீர்கள்.
கார்த்திகை 1 : உங்களுக்கு ஏற்படும் செலவால் மனச்சங்கடம் உண்டாகும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 : சுபச்செலவு செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.
ரோகிணி : நீங்கள் எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் இன்று வந்து சேரும்.
மிருகசீரிடம் 1, 2 : எதிரிகளால் உண்டான தொல்லைகளை முறியடிப்பீர்கள்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4 : அரசு வழியில் நன்மைகள் வந்து சேரும்.மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை: உங்கள் கவனக்குறைவால் சில சங்கடங்கள் உண்டாகும்.
புனர்பூசம் 1, 2, 3: தொழில் மீதான சிந்தனை மேலோங்கும்.நட்பு வட்டம் விரியும்.

கடகம்: புனர்பூசம் 4 : தரும சிந்தனை மேலோங்கும். கோவிலுக்கு செல்வீர்கள்.
பூசம் : இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும். மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : இருக்கும் இடத்தை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள்.

சிம்மம்: மகம் : உங்கள் செயல்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி தோன்றும்.
பூரம் : அந்நியர்கள் வழியே ஆதாயம் காண்பீர்கள். நிதிநிலை கூடும்.
உத்திரம் 1: உடல் நிலைக்காக மருத்துவரை சந்திக்க நேரும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 : உங்களுடைய வார்த்தைகளால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.
அஸ்தம் : குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் வந்து போகும்.
சித்திரை 1, 2 : எதிர்பார்த்த செயலில் தடை உண்டாகி பின்னர் சரியாகும்.

துலாம்: சித்திரை 3, 4 : மனதில் தேவையற்ற குழப்பங்கள் மேலோங்கும்.
சுவாதி : தொழில், வேலை காரணமாக வெளியூர் பயணம் ஏற்படும்.
விசாகம் 1, 2, 3 : உங்களுடைய வேலை சில இழுபறிக்குப்பின் முடியும்.

விருச்சிகம்: விசாகம் 4 : எதிர்பார்த்த பணம் இன்று உங்களுக்கு வந்து சேரும்.
அனுஷம் : உழைப்பிற்கு ஏற்ற ஆதாயம் உண்டாகும்.நிம்மதியான நாள்.
கேட்டை : தைரியத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.

தனுசு: மூலம் : நட்புகளால் சங்கடம் உண்டாகும் என்பதால் எச்சரிக்கைத் தேவை.
பூராடம் : உங்கள் கவனக்குறைவால் சில நெருக்கடி தோன்றும்.விழிப்புணர்வு தேவை.
உத்திராடம் 1 : யோசிக்காமல் பேசும் வார்த்தைகளால் உறவுகள் பகையாகும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 : உங்கள் செயல்பாடுகளில் இன்று கஷ்டத்தை சந்திப்பீர்கள்.
திருவோணம் : எதிரிகளின் தொல்லையால் மனதில் கலக்கம் உண்டாகும்.
அவிட்டம் 1, 2 : குடும்பத்தில் ஒருவருக்கு குழப்பம் நீங்கும் நிம்மதி காணும் நாள்.

கும்பம்: அவிட்டம் 3, 4 : துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.
சதயம் : எதிர்பாராத பண வரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3 : தந்தைவழி உறவுகளிடம் இருந்த மனவருத்தம் நீங்கும்.

மீனம்: பூரட்டாதி 4 : நீங்கள் மனதில் நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள்.
உத்திரட்டாதி : வருமானத்தில் இருந்து வந்த தடை நீங்கும்.
ரேவதி : உங்கள் செயல்களால் குடும்பத்திற்குள் குழப்பம் தோன்றும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்