இன்றைய ராசி பலன் 01.12.2020

மேஷம்: அசுவினி: நல்லவர்கள் தொடர்பால் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள்
பரணி: வாழ்க்கைத்துணையின் உதவியுடன் சிக்கனத்தைக் கையாளுவீர்கள்.
கார்த்திகை 1: மனப்பூர்வ உழைப்புக் காரணமாகப் பாராட்டும், பலனும் உண்டு.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: இயந்திரப்பணிகளில் கவனமாக இருப்பது நல்லது.
ரோகிணி: உதாசீனப்படுத்தியவர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள்
மிருகசீரிடம் 1,2: உணர்ச்சிவசப்படுவதன் மூலம் மனக்கசப்பு உருவாகலாம்.

மிதுனம் : மிருகசீரிடம், 3,4: தடைபட்ட விஷயங்கள் எல்லாம் முயற்சியால் கூடிவரும்.
திருவாதிரை: உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம்: 1,2,3: வாக்கு கொடுத்தவர்களால் நீங்கள் ஏமாற்றம் ஏற்படலாம்.

கடகம்: புனர்பூசம்,4: சகிப்புத் தன்மை உண்டாகும். மனக்கசப்புகள் மாறும்.
பூசம்: பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.
ஆயில்யம்: பணியாளருக்கு சம்பள உயர்வோடு கூடிய பதவி உயர்வு வரலாம்.

சிம்மம்: மகம்: மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்டிருந்த வருத்தங்கள் தீரும்.
பூரம்: குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். நண்பருக்கு உதவுவீர்கள்.
உத்திரம்,1: குடியிருக்கும் வீட்டால் இதுவரை ஏற்பட்ட பிரச்னைகள் அகலும்.

கன்னி: உத்திரம்,2,3,4: திருமண முயற்சியில் இதுவரை இருந்த தடை அகலும்.
அஸ்தம்: விரயத்திற்கேற்ப பண வரவும் கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
சித்திரை, 1,2: பணியாளர்களுக்கு மாற்றங்கள் விரும்பும்படி அமையும்.

துலாம்: சித்திரை, 3,4: வெளிநாட்டிலிருந்து நீங்கள் விரும்பும் தகவல்கள் வந்து சேரும்.
சுவாதி: சகோதர ஒற்றுமை பலப்படும். சந்திப்புகள் சுமுகமாக நடைபெறும்.
விசாகம் 1,2,3: பலகாலமாக வீடு வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்: விசாகம்,4: தற்போது தொழில் தொடங்கலாமா என சிந்தித்துச் செயல்படுவீர்கள்.
அனுஷம்: எதிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள்.
கேட்டை: உடன்பிறப்புகளின் திருமணம் சிறப்பாக நடைபெற்று மகிழ்ச்சி தரும்.

தனுசு: மூலம்: தொழில், வியாபாரம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும்.
பூராடம்: நின்றிருந்த கட்டிடப் பணி தொடரும். நண்பர்களின் சந்திப்பு உண்டு.
உத்திராடம்,1: கடந்த கால சம்பவங்களால் ஏற்பட்ட வருத்தங்கள் தீரும்.

மகரம்: உத்திராடம்,2,3,4: வசதிகள் பெருகும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
திருவோணம்: தம்பதி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மறையும்.
அவிட்டம்,1,2: தாய்வழி, சகோதர வர்க்கத்தினரின் ஒத்துழைப்பு உண்டு.

கும்பம்: அவிட்டம் 3,4: உறவினர்களின் பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடிவடையும்.
சதயம்: குடும்பத்தினரின் ஆரோக்யம் திருப்திகரமாகவே இருக்கும்.
பூரட்டாதி 1,2,3: பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசுவதை தவிர்க்கவும்.

மீனம்: பூரட்டாதி 4: மனதிற்கு பிடித்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கக்கூடும்.
உத்திரட்டாதி: உங்கள் செயல்பாடுகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கலாம்.
ரேவதி: பெண்களுக்கு சகபணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்