இன்றைய ராசி பலன் – மே 27,2022

மேஷம் : அசுவினி: ஈடுபடும் செயலில் இன்று வெற்றி உண்டாகும். நண்பர்கள் வழியே பிரச்னைகள் உருவாகலாம்.
பரணி: மனக்குழப்பம் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் நெருக்கடி மறையும். எதிர்பாலினரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
கார்த்திகை 1: மனதில் இருந்த பிரச்னை விலகும். எதிர்பார்த்த விஷயம் நிறைவேறும். இனிய சம்பவம் நடந்தேறும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: பேச்சில் கவனம் தேவை. எதிர்பாராத செலவு வரலாம். குடும்பத்தினரால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.
ரோகிணி: குடும்பத்தினரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற செலவு செய்வீர்கள். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். நீங்கள் விரும்பியதை இன்று அடைவீர்கள்.
மிருகசீரிடம்1,2: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். புதிய நண்பரால் அனுகூலம் உண்டு.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: பிறரால் செய்ய முடியாத ஒரு செயலை நீங்கள் செய்து முடிப்பீர்கள். கவுரவம், செல்வாக்கு உயரும்.
திருவாதிரை: நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும். நட்புகளால் ஆதாயம் அடைவீர்கள். அரசு வழியில் உதவி கிடைக்கும்.
புனர்பூசம்1, 2, 3: செயலில் வெற்றி அடைவீர்கள். பொருளாதார நெருக்கடி விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

கடகம்: புனர்பூசம் 1, 2, 3: தடைகளை வெல்வீர்கள். முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
பூசம்: தொழிலில் இருந்த சிக்கலை சரிசெய்வீர்கள். அதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். செல்வாக்கு உயரும்.
ஆயில்யம்: வேலை தேடுபவர்களுக்கு நல்ல தகவல் வரும். தொழில் தொடங்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுவர். நிலம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: முயற்சியில் தடை குறுக்கிட்டு விலகும். இனம் புரியாத பயமும் குழப்பமும் உண்டாகும்.
அஸ்தம்: எதிர்பாராத பிரச்னையை சந்திப்பீர்கள். பண விஷயத்தில் கவனம் தேவை. யோசித்து செயல்படுங்கள்.
சித்திரை 1, 2: பணவரவில் தடைகளை சந்திப்பீர்கள். சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதை தவிருங்கள்.

துலாம் : சித்திரை 3, 4: செயல்களில் இருந்த தடை விலகும். பெரியோர் ஆதரவால் விருப்பம் நிறைவேறும்.
சுவாதி: நண்பர் உதவியால் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த வரவால் மனம் மகிழும்.
விசாகம் 1, 2, 3: எதிர்பாலினரால் எண்ணம் நிறைவேறும். நட்பில் விரிசல் சீராகும். அந்நியர் விஷயத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்: விசாகம்4: எதிரி பிரச்னைக்கு முடிவு கட்டுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்குரிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
அனுஷம்: நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். சுபநிகழ்ச்சி நடத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். நல்ல தகவல் வரும்.
கேட்டை: எதிரி தொல்லைக்கு முடிவு கட்டுவீர்கள். செயல்களில் வேகம் அதிகரிக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள்.

தனுசு: மூலம் செயல்களில் கவனம் தேவை. கவனம் சிதறினால் சில இழப்புகளை சந்திக்க நேரிடலாம்.
பூராடம்: பணி புரியும் இடத்தில் தடைகளை சந்திக்கலாம். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
உத்திராடம் 1: செயல்களில் ஏமாற்றத்தை சந்திக்க நேரும். ஆன்மிகச் சிந்தனை உங்களைப் பாதுகாக்கும்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: அரசு தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும்.
திருவோணம்: அலைச்சல் கூடும். தேவையானதை பெற போராட வேண்டியிருக்கும். உடல்நலனில் கவனம் தேவை. .
அவிட்டம் 1, 2: வீண் முயற்சியில் ஈடுபட்டு சங்கடத்தை அடைவீர்கள். உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாகலாம்.

கும்பம்: அவிட்டம் 3, 4: முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். அந்நியர்களால் ஆதாயம் உண்டாகும்.
சதயம்: யோசித்து செயல்பட்டு முக்கிய செயலில் வெற்றி அடைவீர்கள். நெருக்கடி விலகும் நாள்.
பூரட்டாதி 1, 2, 3: சூழ்நிலை இன்று சாதகமாகும். நினைத்ததை செய்து முடிப்பீர்கள். செல்வாக்கு உயரும்.

மீனம்: பூரட்டாதி 4: வீண் செலவால் நெருக்கடியை சந்திப்பீர்கள். பணம் பல வழிகளிலும் செலவாகலாம்.
உத்திரட்டாதி: பேச்சால் பிரச்னைக்கு ஆளாகலாம். செலவு குறித்த கவலை உண்டாகும். பணத்தில் கவனம் தேவை.
ரேவதி: நெருக்கடியை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த ஆதாயத்தைக் காண முடியாமல் போகும். உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்