இன்றைய ராசி பலன் – மே 24,2022

மேஷம் : அசுவினி: எதிர்பார்த்த வகையில் இன்று வருமானம் வரும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.
பரணி: தொழிலில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
கார்த்திகை 1: புதிய முயற்சிகளை தவிர்க்கவும். வழக்கமான செயல்பாடுகளின் வழியே நன்மை உண்டாகும்.

ரிஷபம் : கார்த்திகை 2, 3, 4: தொழிலை விரிவு செய்யும் சிந்தனை மேலோங்கும். புதிய திட்டம் தீட்டி வெற்றி காண்பீர்கள்.
ரோகிணி: எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். மறைமுக எதிரிகளைக் கண்டு விலகுவீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: புதிய முயற்சி இன்று வேண்டாம். தேவைக்கேற்ப வருமானம் உங்களுக்கு வந்து சேரும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: உறவினர் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்ப்பு ஒன்று இன்று நிறைவேறும்.
திருவாதிரை: திட்டமிட்ட செயல்களில் பின்னடைவு ஏற்படும். விடாமுயற்சிக்குப்பின் தேவை நிறைவேறும்
புனர்பூசம் 1, 2, 3: நிதானம் தேவைப்படும் நாள். யோசித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

கடகம்: புனர்பூசம் 4: தேவையற்ற குழப்பம் ஏற்படும். எதிர்பாராத தடைகளால் நினைத்தது நிறைவேறாமல் போகும்.
பூசம்: புதிய முயற்சிகளை தவிர்க்கவும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம்
ஆயில்யம் உங்கள் செயல்களை சிலர் விமர்சனம் செய்வர். வீண்சிந்தனையால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள்.

சிம்மம் : மகம்: இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள்.
பூரம்: எதிர்பாலினரால் நன்மை அடைவீர்கள். நீங்கள் விரும்பிய பொருள் கைக்கு வந்து சேரும்.
உத்திரம் 1: தடைகள் விலகும் நாள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

கன்னி : உத்திரம் 2, 3, 4: உற்சாகமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். எதிரி தொல்லை மறையும். நன்மையான நாள்.
அஸ்தம்: குருபகவானின் அருளால் சங்கடங்கள் தீரும். அறிவு பூர்வமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.
சித்திரை 1, 2: துணிவுடன் செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும்.

துலாம் : சித்திரை 3, 4: உங்கள் செயல்களில் தாமதம் ஏற்படும். உங்களுடைய கோபத்தை பிறரிடம் காட்ட வேண்டாம்.
சுவாதி: செயலில் இன்று தடைகளை சந்திப்பீர்கள். பெரியவர்களின் ஆதரவுடன் செயல்பட வேண்டிய நாள்.
விசாகம் 1, 2, 3: சொத்துப் பிரச்னையால் சங்கடங்களை சந்திக்கலாம். நண்பர்களால் தொல்லைகள் ஏற்படும்.

விருச்சிகம் : விசாகம் 4: எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். கணக்கு வழக்குகளில் கவனமுடன் இருங்கள். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.
அனுஷம்: மற்றவர்களுக்கு உதவப்போய் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். உறவினர் விஷயத்தில் எச்சரிக்கை தேவை.
கேட்டை: எதிர்பார்த்ததை அடைவதில் தடை உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனை உங்களுக்கு நன்மையளிக்கும்.

தனுசு : மூலம் சுபச்செலவுகளை சந்திப்பீர்கள். வேலை வாய்ப்பு முயற்சி இன்று வெற்றியடையும். முன்னேற்றமான நாள்.
பூராடம்: நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். சகோதரர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். மகிழ்ச்சியான நாள்.
உத்திராடம் 1: லாபம் காண்பீர்கள். வீடு, மனை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் உதவுவர்.

மகரம் : உத்திராடம் 2, 3, 4: உங்கள் பேச்சால் சங்கடங்களை சந்திக்க நேரிடும். வார்த்தைகளில் நிதானம் தேவை.
திருவோணம்: குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். செயல்களில் அவசரம் வேண்டாம். கவனம் தேவை.
அவிட்டம் 1, 2: குடும்பத்தினரால் நெருக்கடி வரலாம். எதிர்பார்த்த வருமானத்தில் தாமதம் ஏற்படும்.

கும்பம் : அவிட்டம் 3,4: நினைத்ததை சாதிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
சதயம்: அமைதியுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். உறவினர்கள் வழியில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.
பூரட்டாதி 1, 2, 3: மனக் குழப்ப வரலாம். வீண் ஆசைகளுக்கு இடம் கொடுத்தால் உங்கள் நிம்மதி பாதிக்கும்.

மீனம் : பூரட்டாதி 4: அலைச்சல் கூடும். வீண் முயற்சிகளால் சங்கடத்தை அடைவீர்கள். எச்சரிக்கை தேவை.
உத்திரட்டாதி: மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படும். செயல்களில் இழுபறியும் சங்கடமும் உண்டாகும்.
ரேவதி: செலவை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். புதிய முயற்சிகள் எதுவும் இன்று வேண்டாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்