இன்றைய ராசி பலன் – மே 21,2022

மேஷம்: அசுவினி: தொழிலில் இருந்த சங்கடங்கள் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு அதில் வெற்றி பெறுவீர்கள்.
பரணி: அறிவு பூர்வமாக செயல்பட்டு நினைத்தவற்றை நடத்தி முடிப்பீர்கள். இன்று உங்களுக்கு யோகமான நாள்.
கார்த்திகை 1: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர்கள். அந்தஸ்து மிக்கவர்களின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் வந்து சேரும்.
ரோகிணி: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பயணங்களின் வழியே நன்மை உண்டு.
மிருகசீரிடம் 1, 2: விலகிச்சென்ற உறவினர்கள் உங்களை தேடி வருவர். குடும்பத்தில் செல்வாக்கு உயரும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: யோசித்து செயல்பட வேண்டிய நாள். தேவையற்றப் பிரச்னைகள் உருவாகி சங்கடப்படுத்தும்.
திருவாதிரை: மறைமுக எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். குடும்பத்திலும் நெருக்கடிகளை சந்திப்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: பயணத்தில் கவனம் தேவை. முயற்சியில் இழுபறியாகி சோர்வுக்கு ஆளாகலாம். அமைதி காக்கவும்.

கடகம்: புனர்பூசம் 4: நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னைகள் விலகும். வரவு கூடும்.
பூசம்: திறமை வெளிப்படும் நாள். நீண்ட நாளாக நினைத்த ஒரு செயலை இன்று செய்து வெற்றி பெறுவீர்கள்.
ஆயில்யம் கணவன் மனைவி உறவு பலப்படும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

சிம்மம்: மகம்: விடாமுயற்சியால் வெற்றி காண்பீர்கள். எதிரிகளால் உண்டான சங்கடங்கள் நீங்கி நிம்மதி அடைவீர்கள்.
பூரம்: உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும்.
உத்திரம் 1: உங்கள் செயல்பாடு கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவர். இன்று மகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

கன்னி : உத்திரம் 2, 3, 4: உங்கள் முயற்சியில் தடைகள் உண்டாகி பின் சரியாகும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும்.
அஸ்தம்: நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும்.
சித்திரை 1, 2: விடாமுயற்சியால் திட்டமிட்ட செயலை முடிப்பீர்கள். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

துலாம்: சித்திரை 3, 4: பழைய பிரச்னைகளில் ஒன்று மீண்டும் தோன்றும். அரசு வழியில் நெருக்கடியை சந்திக்கலாம்.
சுவாதி: உறவுகளால் சங்கடங்களை சந்திக்க நேரலாம். அமைதியாக செயல்பட வேண்டிய நாள்.
விசாகம் 1, 2, 3: எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகும். தொழிலில் இருந்த நெருக்கடியை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

விருச்சிகம்: விசாகம் 4: துணிச்சலாக செயல்பட்டு நினைத்த ஒன்றில் வெற்றி அடைவீர்கள். திறமை வெளிப்படும் நாள்.
அனுஷம்: சகோதரர்கள் உதவியுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
கேட்டை: புதிய திட்டங்கள் தீட்டி அதன் வழியே செயல்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

தனுசு: மூலம் கொடுத்த வாக்கை நிறைவேற்றி நிம்மதி காண்பீர்கள். நீண்டநாள் பிரச்னை தீரும்.
பூராடம்: வரவை விட செலவு அதிகரிக்கும் குடும்பத்தினருக்காக செலவு செய்ய நேரிடும்.
உத்திராடம் 1: எதிர்பார்த்த விஷயம் இழுபறியாகும். குடும்பத்தினரின் ஆதரவு கண்டு மகிழ்வீர்கள்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4: மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுக்க முடியாமல் வரவை இழப்பீர்கள்.
திருவோணம்: வார்த்தைகளில் கவனம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். நிதானத்துடன் செயல்படுங்கள்.
அவிட்டம் 1, 2: கடந்த கால அனுபவத்தால் சங்கடத்தில் இருந்து மீள்வீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்: அவிட்டம் 3, 4: எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். செலவுகள் அதிகரிப்பதால் சங்கடப்படுவீர்கள்.
சதயம்: குடும்பத்தினரிடம் கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள். வீண் செலவுகளை சந்திப்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: அவசர முடிவால் பிரச்னை ஏற்படலாம். விடாமுயற்சியால் தேவை நிறைவேறும்.

மீனம்: பூரட்டாதி 4: குடும்பத்தின் தேவை நிறைவேறும். பிள்ளைகளுக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறும்.
உத்திரட்டாதி: வரவேண்டிய பணம் கைக்கு வரும். நீண்டநாள் பிரச்னை ஒன்றில் நல்ல முடிவு உண்டாகும்.
ரேவதி: நினைத்ததை அடைந்து மகிழ்வீர்கள். பணியில் இருந்த பிரச்னைகள் விலகும். நன்மையான நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்