இன்றைய ராசிபலன் – 27.05.2020

மேஷராசி அன்பர்களே!

காரியங்கள் இழுபறியாகி முடியும். சிலருக்கு எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. முக்கிய முடிவுகள் எடுப்பதில் பொறுமை அவசியம். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல நடைபெறும். இன்று சிவபெருமானை வழிபடுவது நன்று.

ரிஷபராசி அன்பர்களே!

கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அதிகப்படியான செலவும் அலைச்சலும் ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் குடும்பத்தில் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். இன்று நீங்கள் வழிபடவேண்டிய தெய்வம் மகாலட்சுமி.

மிதுனராசி அன்பர்களே!

தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வியாபாரம் வழக்கம்போல நடைபெறும். இன்று நீங்கள் துர்கையை வழிபடுவது நன்று.

கடகராசி அன்பர்களே!

எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் ஒருவழியாக அனுகூலமாக முடிந்துவிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மூன்றாவது நபரின் தலையீடு காரணமாக குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பம் நீங்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். இன்று முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

சிம்மராசி அன்பர்களே!

தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். தாயாருடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். அவர் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும். இன்று நடராஜப்பெருமானை வழிபடுவது சிறப்பு.

கன்னிராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப் படும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். பிற்பகலுக்கு மேல் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். இன்று மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பு.

துலாராசி அன்பர்களே!

முக்கியமான முடிவுகள் எதுவும் எடுக்கவேண்டாம். கூடுமானவரை வீண் அலைச்சலைத் தவிர்த்துவிடவும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் பணியாளர் களால் செலவுகள் ஏற்படும். இன்று நரசிம்மரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

விருச்சிகராசி அன்பர்களே!

வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். எதிர்பாராத செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் அவருடன் பேசும் போது வார்த்தைகளில் நிதானம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். இன்று விநாயகரை வழிபடுவது நன்று.

தனுசுராசி அன்பர்களே!

பிற்பகலுக்கு மேல் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பணத்தை செலவு செய்யும்போது அவசியமான செலவுதானா என்று யோசித்துச் செய்வது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் அவர்களுடன் கனிவாக நடந்துகொள்வது அவசியம். ஆஞ்சநேயரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

மகரராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். இன்று சிவபெருமானை வழிபடுவது சிறப்பு.

கும்பராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். உறவினர்கள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சகோதரர்கள் நீங்கள் கேட்கும் உதவியை மறுக்காமல் செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக் கும். இன்று அம்பிகையை வழிபடுவது நன்று.

மீனராசி அன்பர்களே!

சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகி முடியும். ஆனால், செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. தந்தையாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வியாபாரம் எப்போதும்போல் நடைபெறும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். இன்று முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு.

முகநூலில் நாம்