இன்றைய ராசிபலன் 22.03.2021

மேஷராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்துத் தொடங்கும் செயல்கள் வெற்றிபெறும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடமிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபராசி அன்பர்களே!

தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப விஷயமாக முக்கிய முடிவு எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். சிவ வழிபாடும் குறிப்பாக சிவாலய தரிசனமும் நன்மை பயக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்,

மிதுனராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும். சிலருக்கு வீண் அலைச்சல் ஏற்படவும் அதனால் உடல் அசதி உண்டாகவும் கூடும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். வெளியில் செல்லும்போது தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். முருகப்பெருமானை வழிபட அனைத்தும் நலமாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் குடும்பத்துடன் தெய்வவழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கடகராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வீட்டுப் பராமரிப்புப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். அவருடைய ஆலோசனை உங்கள் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அம்பிகையை மலர் சாத்தி வழிபட்டு இந்த நாளைத் தொடங்குங்கள். இறையருள் கைகூடும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மராசி அன்பர்களே!

தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர் மூலம் உங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும். தந்தையுடனும் தந்தைவழி உறவினர்களுடனும் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். அரசுப் பணியில் இருப்பவர்கள் அதிகாரிகளிடம் பேசும்போது பதற்றம் தவிர்ப்பதுடன் பணிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தவும். ஸ்ரீ ரங்கநாதப்பெருமானை வணங்கிவாருங்கள். நன்மைகள் அதிகரிக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் மூலம் ஆதாயமும் ஏற்படக்கூடும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் காரணமாக உடல் அசதி ஏற்படும்.

கன்னிராசி அன்பர்களே!

சகோதரர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் நீண்ட நாள்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். பிற்பகலுக்கு மேல் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். இன்று நீங்கள் தொடங்கும் காரியம் சாதகமாக முடியும். பிள்ளைகளுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். விநாயகர் வழிபாடு இன்று மிகவும் அவசியம்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும்.

துலாராசி அன்பர்களே!

திடீர் செலவுகள் ஏற்படும். தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மகான்களை வழிபட வேண்டிய நாள். குறிப்பாக ஷீர்டி சாயிபாபா அல்லது ஸ்ரீ ரமணமகரிஷியை வழிபட்டு நற்பலன்கள் பெறுங்கள்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

விருச்சிகராசி அன்பர்களே!

இன்று நாள் முழுவதுமே சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். ஆனால், நண்பர்கள் உங்கள் தேவையை அறிந்து செய்யும் உதவி ஆறுதல் தரும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் சில சிரமங்கள் ஏற்படும். சங்கடங்கள் தீர்க்கும் அந்த சமயபுரத்தம்மனை நினைத்து வழிபடுங்கள். தடைகள் விலகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மறைமுக இடையூறுகள் ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

தனுசுராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். முக்கியமான வேலைகளை இன்றே முடித்துவிடுங்கள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பால் முயற்சி சாதகமாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். திருப்பதி வேங்கடவனை நினைத்து இந்த நாளைத் தொடங்குவது மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி தரும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதர வகையில் சில சங்கடங் கள் ஏற்பட்டு விலகும்.

மகரராசி அன்பர்களே!

சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிவ வழிபாடு செய்ய வேண்டிய நாள்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

கும்பராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு குடும்பம் தொடர்பான பணிகளுக்காக சற்று அலைச்சல் ஏற்படும். சிலருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகப் பணிகளில் சில சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். பிற்பகலுக்கு மேல் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை தியானிப்பதும் விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பதும் இன்றைய நாளை மிகவும் இனிய நாளாக மாற்றும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

மீனராசி அன்பர்களே!

மன உறுதியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத பணலாபம் உண்டாகும். கடன்களில் ஒரு பகுதியைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பிற்பகலுக்கு மேல் உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்தவும். பிள்ளைகள் மூலம் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். அருகில் இருக்கும் பெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதிக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். மேலும் நன்மைகள் நடக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைக் காலையிலேயே தொடங்குவது சாதகமாக முடியும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டாகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்