இன்றைய ராசிபலன் 18.09.2021

மேஷம்: அசுவினி: பணியிடத்தில் ஏற்பட்டிருந்த ஒரு சிரமம் இன்று அகலும்.
பரணி: உடன்பிறப்புகளால் கடன் சுமை குறையும். வெற்றிகள் கூடும்.
கார்த்திகை 1: வீடுமாற்றம், இடமாற்றம் உண்டு. கடன் தொல்லை குறையும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: பல நாள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
ரோகிணி: உங்கள் தவறால் பொது வாழ்வில் இருந்த புகழ் குறையலாம்.
மிருகசீரிடம் 1,2: வம்புகளால் ஏற்பட்ட பிரச்னைகளை சமாளிப்பீர்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: எதிரிகளின் கை தாழும். வளம் காணும் நாள்.
திருவாதிரை: பொருளாதார முன்னேற்றம் முன்பைவிடச் சிறக்கும்.
புனர்பூசம் 1,2,3: பாதியில் நின்ற பணிகளை முனைந்து முடிப்பீர்கள்.

கடகம்: புனர்பூசம் 4: வருமானம் திருப்தி தரும். உறவினர் தொல்லை தொடரும்.
பூசம்: தேவையான பொருட்களை வாங்க செலவுகள் ஏற்படும்.
ஆயில்யம்: வெளிநாட்டில் இருந்து வரும் செய்தி மகிழ்ச்சி தரும்.

சிம்மம்: மகம்: யோசித்துச் செயல்படவில்லை என்றால் தொல்லை ஏற்படும்.
பூரம் வம்புகளில் ஈடுபட வேண்டாம். அவசரத்தை தவிர்ப்பது நல்லது.
உத்திரம் 1: துாரத்து உறவினர்களின் உதவி கிடைக்கும். புகழ் அதிகரிக்கும்.

கன்னி: உத்திரம் 2,3,4: பிறரிடம் கனிவாகப் பேசி எதையும் சாதிக்கப்பாருங்கள்.
அஸ்தம்: உங்களைப் புரிந்து கொள்ளாமல் செயல்பட்டவர்கள் மாறுவர்.
சித்திரை 1,2: வாழ்வில் உயர்வதற்கான முயற்சிகளை செய்வீர்கள்.

துலாம்: சித்திரை 3,4: பிரியமான சிலரைச் சந்திப்பீர்கள். பணவரவு சிறிது உண்டு.
சுவாதி: உறவினர்களின் செயல்கள் மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கும்.
விசாகம் 1,2,3: அருகில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. மனம் நிறையும்.

விருச்சிகம்: விசாகம் 4: அதிகாரிகள் கருணையுடன் நடந்து கொள்வர். ஆதாயம் உண்டு.
அனுஷம்: புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள்
கேட்டை: மனதிற்கு நிறைவு தரும் நிகழ்வுகள் நடைபெறும் நாள்.

தனுசு: மூலம்: வேலை பற்றி செய்த முயற்சியில் தாமதம் ஏற்படக்கூடும்.
பூராடம்: வாழ்க்கைத்துணையின் ஆதரவு காரணமாக பிரச்னை ஒன்று அகலும்.
உத்திராடம் 1: எதிர்ப்புகள் மாறும். தொட்டது துலங்கும். வெற்றி உண்டு.

மகரம்: உத்திராடம் 2,3,4: எதிர்பார்த்த விஷயம் நடைபெற்று மகிழ்ச்சியை தரும்.
திருவோணம்: இன்று மேற்கொள்ளும் பயணங்களால் பெரிய நன்மைகள் இருக்காது.
அவிட்டம் 1,2: இன்று மாலை வரும் செய்தி சந்தோஷப்பட வைக்கும்.

கும்பம்: அவிட்டம் 3,4: நேற்றைய பிரச்னைகள் முடிவிற்கு வரும் நாள்.
சதயம்: திட்டமிட்ட பணிகளில் சிறு மாற்றம் செய்வீர்கள்.
பூரட்டாதி 1,2,3: கடந்த சில நாட்களாக வாட்டி வந்த மனக்குழப்பம் அகலும்.

மீனம்: பூரட்டாதி 4: தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.
உத்திரட்டாதி: தொழில் முன்னேற்றம் சற்றே அதிகரிக்கும் நாள்.
ரேவதி: அலைபேசி மூலம் பொன்னான செய்தி வரும். தயக்கம் தீரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்