இன்றைய ராசிபலன் 16.09.2021

மேஷம்: அசுவினி: உற்றவர்களின் செயல்பாடுகள் நிம்மதி தரும். பயம் நீங்கும்.

பரணி: எந்தச் செயலிலும், பேச்சிலும் மிகுந்த கவனம் தேவை.

கார்த்திகை 1: அமைதி கூடும். பெண்கள் புதிய நட்பால் உற்சாகம் அடைவீர்கள்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: பரபரப்பாக செயல்பட்டு பணியை முடித்து பாராட்டு பெறுவீர்கள். 

ரோகிணி: கவலை நீங்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். 

மிருகசீரிடம் 1,2: நேற்றைய பகை மாறி, சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: வீடு மாற்றம் உறுதியாகலாம். சகோதர வழிப் பிரச்னை தீரும்.

திருவாதிரை: ஜாமீன் கையெழுத்தால் ஏற்பட்ட தொல்லை முடிவிற்கு வரும்

புனர்பூசம் 1,2,3: தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும். 

கடகம்: புனர்பூசம் 4: உங்கள்மீது உயர்ந்தோர் வைத்த மதிப்பும், மரியாதையும் உயரும். 

பூசம்: புதிய நண்பர்கள் இணைவர். வீடு கட்டுவீர்கள். செலவு கூடும்.

ஆயில்யம்: பரபரப்பாகச் செயல்படுவீர்கள். தொலை துாரத்திலிருந்து நல்லசெய்தி வரும்.

சிம்மம்: மகம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பணம் வரும். 

பூரம்: உங்கள் கொள்கையை கொஞ்சம் தளர்த்திக் கொள்ள வேண்டி வரும். 

உத்திரம் 1: நல்லவர்களின் உதவி கிடைக்கும். எதிரிகள் மனம் மாறுவர்.

கன்னி: உத்திரம் 2,3,4: சமூகத்தில் உங்கள் மதிப்பு கூடும்படியான செயல்களை செய்வீர்கள். 

அஸ்தம்: யாரைப் பற்றியும் குறைகூறி வம்பில் மாட்டாதீர்கள்.

சித்திரை 1,2: எப்போதோ செய்த தவறு பற்றி தாமதமாக சிரமம் ஏற்படும்.

துலாம்: சித்திரை 3,4: விலகிச் சென்றவர் விரும்பி வந்து சேரும்போது இன்முகம் காட்டுங்கள்.

சுவாதி: குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்காக சுபச்செலவு ஏற்படலாம்.

விசாகம் 1,2,3: சகோதர, சகோதரியின் ஆதரவு கிடைக்கும். பணவரவு உண்டு. 

விருச்சிகம்: விசாகம் 4: .பணி சிறக்கும். நல்லவர்களின் தொடர்பால் நலம் விளையும்.

அனுஷம்: தேவைகள் பற்றிய கவலை தீரும். சிறு சிறு குழப்பம் ஏற்படும். 

கேட்டை: கடல் தாண்டி வரும் செய்தி சந்தோஷம் தருவதாக அமையும் 

மகரம்: உத்திராடம் 2,3,4: நல்ல நண்பர்களுக்காக செலவிடும் சூழல் உருவாகும். 

திருவோணம்: வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை. மகிழ்ச்சி கூடும். 

அவிட்டம் 1,2: மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. 

கும்பம்: அவிட்டம் 3,4: குதுாகலம் ஏற்படும். எதிர்பாராத வீண் செலவுகள் உண்டு.

சதயம்: காதலில் முன்னேற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சி நிலவும்,

பூரட்டாதி 1,2,3: உறுதியோடு செயல்படுவீர்கள். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.

மீனம்: பூரட்டாதி 4: வீட்டைப் புதுப்பிக்க எடுத்த முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

உத்திரட்டாதி: புதிய பொருள் சேர்க்கை உண்டு. உறவினர்கள் உதவி கேட்டு வரலாம்.

ரேவதி: முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்