இன்றைய ராசிபலன் 15.08.2020

மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார் கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷ னரி வகைகளால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். முயற்சியால் வெற்றி பெறும் நாள்

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். முன்கோபம் குறையும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உடல் நிலை சீராகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்து போட்டு பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் புது முயற்சிகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

கடகம்: இன்றைய தினம் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். அநாவசிய செலவுகளை குறைக்க பாருங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டு கொடுத்து போவது நல்லது. விழிப்புடன் வேண்டிய நாள் .

சிம்மம்: புதிய கோணத்தில் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெற்றோர் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் முக்கிய பிரபலங் களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்

கன்னி: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். திறமை வெளிப்படும் நாள்.

துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள் . ஆன்மீகத்தில் ஈடுபாடுஅதிகரிக்கும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர் கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்து ழைப்பு கிடைக்கும். திருப்பங்கள் ஏற்படும் நாள்.

மீனம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளி போனாலும் எதிர் பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து போகும். பணப் பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்பு தொல்லை குறையும். ஆடம்பர செலவு களை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம்

அதிகரிக்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர் களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய உற்சாகத்தை உண்டாக்கும். கனவு நனவாகும் நாள்.

மகரம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத் திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சாதனை படைக்கும் நாள்.

தனுசு: உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

விருச்சிகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்தியோ கத்தில் ஈகோ வந்து செல்லும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்