இன்றைய ராசிபலன் – 08.06.2020

மேஷராசி அன்பர்களே!

மனதில் உற்சாகம் ஊற்றெடுக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி தரும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர் வருகையால் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். இன்று சிவபெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

ரிஷபராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை. உங்கள் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்காது. வியா பாரம் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர் களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். ஆறுமுகப் பெருமானை வழிபட அல்லல்கள் நீங்கும்.

மிதுனராசி அன்பர்களே!

மகிழ்ச்சியான நாள். துணிச்சலுடன் முடிவெடுப்பீர்கள். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தைவழி உறவுகள் கேட்கும் உதவியைச் செய்து தருவீர்கள். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களைப் பற்றித் தவறாகப் பேசிய உறவினர்கள் மனம் வருந்தி மன்னிப்பு கேட்பார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை கள் மறையும். அம்பிகை வழிபாடு அளவற்ற மகிழ்ச்சி தரும்.

கடகராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாக முடியும். பிள்ளைகள் வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனால் பெரிய பாதிப்பு எதுவுமிருக்காது. சகோதரர்களால் செலவுகள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட விற்பனையும் லாபமும் குறைவாகத்தான் இருக்கும். இன்று நீங்கள் துர்கையை வழிபடுவதன் மூலம் நன்மைகளை கூடுதலாகப் பெறலாம்.

சிம்மராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு வீட்டில் மராமத்துப் பணிகள் அதிகரிக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். தட்சிணாமூர்த்தியை வழிபட உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கன்னிராசி அன்பர்களே!

பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளின் உடல்நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மனதில் அடிக்கடி குழப்பங்கள் ஏற்படும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுக்காக செலவு செய்ய நேரிடும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். ஆனால், லாபம் எதிர்பார்த்தபடி இருப்பது மகிழ்ச்சி தரும். வேங்கடேச பெருமாளை வழிபடுவதன் மூலம் மனக் குழப்பங்கள் நீங்கி, அமைதி பெறலாம்.

துலாராசி அன்பர்களே!

மனதில் குழப்பங்கள் நீங்கி உற்சாகம் ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதற்கு வாய்ப்பு ஏற்படும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். அரசாங்க அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி இழுபறியானாலும் கிடைத்துவிடும். லட்சுமி நரசிம்மரை வழிபட முயற்சிகள் சாதகமாக முடியும்.

விருச்சிகராசி அன்பர்களே!

இன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர் மூலம் கிடைக்கும் செய்தி உங்களை உற்சாகப்படுத்துவதாக இருக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். மகான் ராகவேந்திரரை வழிபடுவதன் மூலம் மனஅமைதி பெறலாம்.

தனுசுராசி அன்பர்களே!

காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படுவீர்கள். தாய்வழி உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் அதிகரிக்கும். ஆஞ்சநேயரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

மகரராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவு இருந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்பட்டு திக்கு முக்காட வைக்கும். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் இருந்து வந்த இழுபறி நிலை மாறி, அனுகூலமாக முடியும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பணியாளர்களுக்காக செலவு செய்ய நேரிடும். முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்பராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். காரியங்கள் அனுகூலமாகும். உங்கள் பொறுப்புகளை வாழ்க்கைத்துணை பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவருடன் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமையாக நடந்து கொள்வது அவசியம். வியாபாரம் எதிர்பார்த்ததுபோலவே நடைபெறுவது மகிழ்ச்சி தரும். இன்று மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

மீனராசி அன்பர்களே!

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு சகோதரர்களால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு நவீன டிசைனில் புதிய ஆடைகளை வாங்கும் யோகம் ஏற்படும். சிலருக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். தந்தையின் விருப் பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத் தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். லாபமும் அதிகரிக்கும். குலதெய்வத்தை மானசீகமாக வழிபடுவதன் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறலாம்.

முகநூலில் நாம்