இன்றைய ராசிபலன் 08.03.2021

மேஷம்: அசுவினி: தேவையற்ற விஷயங்களை நினைத்து குழம்ப வேண்டாம்.
பரணி: சில நல்ல காரணங்களுக்காகப் பணம் நிறைய செலவாகும்.
கார்த்திகை 1: கடந்த இரண்டு நாளாக இருந்த கவலைகள் தீரும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: எண்ணிய திட்டம் ஒன்று விரைவில் கைகூடும்.
ரோகிணி: நீங்கள் முன்பு செய்த தவறுக்கு இன்று வருந்தும்படி ஆகும்.
மிருகசீரிடம் 1,2: பெரிய முன்னேற்றம் எதையும் எதிர்பார்ப்பதற்கில்லை.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: அலுவலகச் சூழல் திருப்திகரமாக இருக்கும்.
திருவாதிரை: முன்னேற்ற வாய்ப்புகள் பெருகும். மனபாரம் குறையும்.
புனர்பூசம் 1,2,3: பொருளாதார பிரச்னைகள் விலகும். பலரை சந்திப்பீர்கள்.

கடகம்: புனர்பூசம் 4: சிறியதோர் திருப்புமுனை ஏற்படும். கூடுதல் வருமானம் வரும்.
பூசம்: பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லபடி நிறைவேறும்.
ஆயில்யம்: சந்திக்கும் புதியவர்களில் ஒருவரால் நன்மை விளையும்.

சிம்மம்: மகம்: செலவுகள் காத்துக் கொண்டு இருக்கும். பயணங்கள் ஏற்பாடாகும்.
பூரம்: நிம்மதி அதிகரிக்கும். தேவையற்ற பயத்தை உதறுவது நல்லது.
உத்திரம் 1: முக்கிய முடிவுகள் எடுப்பதில் தாமதிக்க வேண்டாம்.

கன்னி: உத்திரம் 2,3,4: கையில் பணம் புரளும். ஆரோக்யம் பற்றிய அக்கறை கூடும்.
அஸ்தம்: சிறுவயதில் பழகிய நண்பர்களைச் சந்தித்துப் பேசுவீர்கள்.
சித்திரை 1,2: உறவினர் வருகை காரணமாக ரகசியம் ஒன்றை அறிவீர்கள்.

துலாம்: சித்திரை 3,4: உடன்பிறப்பு மூலம் கவலை தீரும். நட்பால் நன்மை விளையும்.
சுவாதி: கவரும் தன்மை அதிகரிப்பதால் செல்வாக்கு கூடுதலாகும்.
விசாகம் 1,2,3: பிள்ளைகளின் செயல்பாடுகள் பெருமிதத்தை தரும்.

விருச்சிகம்: விசாகம் 4: சிறிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
அனுஷம்: தொழிலில் சுமார் லாபம் உண்டு. கவலைகள் நீங்கும்.
கேட்டை: முழு கவனம் செலுத்தி எதையும் செய்து வெல்வீர்கள்.

தனுசு: மூலம்: தடை தாமதங்களைப் பொருட்படுத்தாமல் முன்னேறுவீர்கள்.
பூராடம்: கடந்த நாட்களில் இருந்ததைவிட நிலைமை சீரடையும்.
உத்திராடம் 1: சிறிய பழுதுகள் வருவதால் மின் சாதனங்களை வாங்குவீர்கள்.

மகரம்: உத்திராடம் 2,3,4: பேச்சிலும், செயலிலும் வேகமும், விவேகமும் இருக்கும்.
திருவோணம்: ஆன்மிக நாட்டம் உண்டாகும். பொதுப்பணியில் ஈடுபடுவீர்கள்.
அவிட்டம் 1,2: வாழ்க்கைத்துணையின் ஆலோசனை முன்னேற்றம் தரும்.

கும்பம்: அவிட்டம் 3,4: வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்து கொள்வீர்கள்.
சதயம்: குடும்பத்தில் சிறிய அளவில் மாற்றமும், முன்னேற்றமும் வரும்.
பூரட்டாதி 1,2,3: மனநிம்மதி கிடைக்கும். நல்லோர் தொடர்பு கிடைக்கும்.

மீனம்: பூரட்டாதி 4: ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். மன சஞ்சலம் தீரும்.
உத்திரட்டாதி: ரகசியங்களை வெளியில் சொல்வதை தவிர்ப்பது நல்லது.
ரேவதி: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் கூட நண்பர்களாக மாறுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்