இன்றைய ராசிபலன் 07.10.2021

மேஷம்: அசுவினி: தடுமாற்றங்கள் அகலும் நாள். சிறிய அளவில் தனவரவு உண்டு.
பரணி: முயற்சி ஒன்று கைகூடும். சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும்.
கார்த்திகை 1: மேலதிகாரிக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: சிறு பயணம் ஒன்று நல்ல பலனைத் தரும். மகிழ்வான நாள்.
ரோகிணி: காலை நேரத்தில் எதிலும் அதிக கவனம் தேவைப்படும் நாள்.
மிருகசீரிடம் 1,2: அருகில் இருப்பவர்களின் ஆதரவு அதிகரிக்கும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் தீர்ந்து நிம்மதி ஏற்படும்.
திருவாதிரை: நேற்று முடிவடையாத நன்மை ஒன்று இன்று நடைபெறும்.
புனர்பூசம் 1,2,3: வியாபாரிகள் யோசித்துச் செயல்பட வேண்டிய நாள்.

கடகம்: புனர்பூசம் 4: உடல் ரீதியாக ஏற்பட்ட உபாதை தீர்ந்து நிம்மதி வரும்.
பூசம்: திடீர் சம்பவம் ஒன்று நிகழ்ந்து உற்சாகம் கூடுதலாகும்.
ஆயில்யம்: குழந்தைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்: மகம்: பணியிடத்தில் நிறைய மாறுதல் வரலாம். முயற்சியில் தாமதம் ஏற்படும்.
பூரம்: வியாபாரம் சூடுபிடிக்கும். நட்பு வட்டாரம் விரிவடையும்.
உத்திரம் 1: எதிரிகள் பின்வாங்குவர். மனதின் தடுமாற்றங்கள் அகலும்.

கன்னி: உத்திரம் 2,3,4: குடும்பத்தில் சந்தோஷ சம்பவம் ஏற்பட வாய்ப்புண்டு.
அஸ்தம்: சொத்து வாங்கும் முயற்சி கைகூடும். நம்பிக்கை துளிர்க்கும்.
சித்திரை 1,2: தொழில் அமோகமாக நடைபெறும். அடகு வைத்த நகையை மீட்பீர்கள்.

துலாம்: சித்திரை 3,4: வீண் விரயங்களில் இருந்து விடுபடுவீர்கள். நிம்மதி மீளும்.
சுவாதி: சுபநிகழ்ச்சி ஒன்று நடைபெறும். மனதில் இருந்த பயம் நீங்கும்.
விசாகம் 1,2,3: துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். லாபம் வரும்.

விருச்சிகம்: விசாகம் 4: பூமி விற்பனை, வாடகையில் லாபம் வரும். மகிழ்ச்சி கூடும்.
அனுஷம்: சொத்து சேர்க்கை பற்றி இப்போதைக்கு பரபரப்பு வேண்டாம்.
கேட்டை: சுபச்செலவுகள் செய்வீர்கள். அரசியல்வாதியால் அனுகூலம் உண்டு.

தனுசு: மூலம்: மாணவர்களுக்கு நன்மை ஏற்படும். பேச்சினால் லாபம் வரும்.
பூராடம்: மனம் மகிழும். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.
உத்திராடம் 1: குடும்பத்தில் சந்தோஷமான சம்பவங்கள் நடைபெறும்.

மகரம்: உத்திராடம் 2,3,4: பொருளாதார நிலையில் எவ்வித தொய்வும் இருக்காது.
திருவோணம்: குடும்பத்தினரிடையே அன்பு அதிகரிக்கும். சேமிப்பு கூடும்.
அவிட்டம் 1,2: குழந்தைகள் நலன் கருதி தீட்டிய திட்டம் வெற்றி பெறும்.

கும்பம்: அவிட்டம் 3,4: மனதில் நினைத்ததை இன்று செய்து முடிப்பீர்கள்.
சதயம்: நீண்ட நாளாக கிடைக்காத நன்மை ஒன்று இப்போது வரலாம்.
பூரட்டாதி 1,2,3: மனதில் தோன்றும் கருத்துகளை வெளிப்படையாக பேச வேண்டாம்.

மீனம்: பூரட்டாதி 4: அவசரப்போக்கால் சிலரின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.
உத்திரட்டாதி: பணியாளர்கள் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
ரேவதி: பணியில் சுறுசுறுப்பை கூட்ட வேண்டியிருக்கும். உற்சாகமான நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்