இன்றைய ராசிபலன் 02.10.2021

மேஷம்: அசுவினி: குழந்தைகளின் கல்வி விஷயத்திற்காக செலவுகள் சற்றுக்கூடும்.
பரணி: உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும்.
கார்த்திகை 1: வேலையில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம் தேவை.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: மனதில் உற்சாகம் ஏற்படுத்தும் செயல் ஒன்று நடைபெறும்.
ரோகிணி: குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய நற்செய்தி ஒன்று உண்டு.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: எதிரி ஒருவரால் இருந்த மறைமுக தொந்தரவு முடிவுக்கு வரும்.
திருவாதிரை: உறவினர்களிடம் கவனம் தேவை. பேச்சில் நிதானம் அவசியம்.
புனர்பூசம் 1,2,3: முகத்தில் பொலிவு கூடும். வசீகரத்தன்மை அதிகரிக்கும்.

கடகம்: புனர்பூசம் 4: யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கிக் கொடுக்காதீர்.
பூசம்: சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும். பணிகள் விரைந்து முடியும்.
ஆயில்யம்: நகை போன்றவற்றை கவனமாக வைத்துக்கொள்வது நல்லது.

சிம்மம்: மகம்: பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். நிம்மதியான நாள்.
பூரம்: குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம்.
உத்திரம் 1: மூன்றாவது நபர்களிடம் பேசும் போது கவனம் தேவை.

கன்னி: உத்திரம் 2,3,4: இளம் வயதினருக்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்
அஸ்தம்: செலவு அதிகமாக இருந்தாலும் வரவும் அதிகரித்து நிம்மதி தரும்.
சித்திரை 1,2: உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

துலாம்: சித்திரை 3,4: நேற்றைய பிரச்னை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
சுவாதி: பணியாளர்கள் உயரதிகாரிகளிடம் பேசும் போது கவனம் தேவை.
விசாகம் 1,2,3: குடும்பச்சுமை குறையும். செலவு சற்றே அதிகரிக்கும்.

விருச்சிகம்: விசாகம் 4: பொருளாதார பிரச்னை அகல நண்பர்கள் வழிகாட்டுவர்.
அனுஷம்: குடும்பத்தினருடன் கலகலப்பாகப் பேசி மகிழ்வீர்கள்.
கேட்டை: விலை உயர்ந்த பொருளை வாங்குவீர்கள். கவரும் தன்மை அதிகரிக்கும்.

தனுசு: மூலம்: கற்பனை பிரச்னைகளை உருவாக்கி கொண்டு கவலைப்பட வேண்டாம்.
பூராடம்: மனதுக்கு நெருங்கியவர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள்.
உத்திராடம் 1: யாரிடமும் கடுமை காட்ட வேண்டாம். வாக்குவாதம் தவிருங்கள்.

மகரம்: உத்திராடம் 2,3,4: உங்கள் நலம் விரும்புவோரைப் பகைத்துக்கொள்ளாதீர்கள்.
திருவோணம்: புதிய வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள்.
அவிட்டம் 1,2: குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான ஏற்பாடுகள் அமையும்.

கும்பம்: அவிட்டம் 3,4: உறவினர்கள் இடையே ஒற்றுமை பலப்படும். மகிழ்ச்சி கூடும்.
சதயம்: நண்பர்கள் சந்திப்பு திடீரென்று நிகழ்ந்து உற்சாகம் கூட்டும்.
பூரட்டாதி 1,2,3: குழப்பங்கள் அகலும். எதிர்பாலினத்தினரால் கூடுதல் நன்மை கிடைக்கும்.

மீனம்: பூரட்டாதி 4: வழக்கமாகச் செய்யும் பணியை இன்று மாற்றி அமைப்பீர்கள்.
உத்திரட்டாதி: எப்போதோ எதிர்பார்த்த லாபம் ஒன்று நிதானமாய் வரும்
ரேவதி: மதியத்திற்கு மேல் மகிழ்ச்சியான சம்பவமொன்று நடைபெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்