இன்றைய ராசிபலன் – 01.06.2020

மேஷராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் வீண்செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

ரிஷபராசி அன்பர்களே!

மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். இன்று குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். சிலருக்கு குடும்பத்துடன் தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும். தாயின் விருப் பத்தை நிறைவேற்றுவீர்கள். பணம் வந்தாலும் திடீர் செலவுகளும் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பைரவரை வழிபடுவது சிறப்பு.

மிதுனராசி அன்பர்களே!

சாதிக்கவேண்டும் என்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். ஆனாலும், புதிய முயற்சிகளில் நன்றாக சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். பணிச் சுமை அதிகரிப்பதால் உடல் அசதி உண்டாகும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை தேவை. ஆஞ்சநேயர் வழிபாடு தடைகளைத் தகர்க்கும்.

கடகராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். விநாயகப்பெருமானை வழிபட விக்கினங்கள் நீங்கும்.

சிம்மராசி அன்பர்களே!

சிந்தித்து செயல்படவேண்டிய நாள். கணவன் – மனைவிக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வீண் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும். மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் நடைபெறும் என்றாலும் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். துர்கையை வழிபடுவது நலம் சேர்க்கும்.

கன்னிராசி அன்பர்களே!

பல வகைகளிலும் அனுகூலமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாகும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். விட்டுப்பிடித்துச் செல்லவும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் குறைவாகத்தான் இருக்கும். இன்று அம்பிகையை வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும்.

துலாராசி அன்பர்களே!

செலவுகள் அதிகரிக்கும் நாள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மூன்றாவது நபர்களின் தலையீட்டைத் தவிர்க்கவும். முக்கிய முடிவு எடுப்பதில் அவசரம் வேண்டாம். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் பணம் கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் கவனமாக இருக்கவும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்று.

விருச்சிகராசி அன்பர்களே!

எடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது நன்று.

தனுசுராசி அன்பர்களே!

இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படு வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள். இன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

மகரராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். அதிகாரிகள் கண்டிப்பாக நடந்துகொள்வார்கள். நண்பர்கள் அனுசர ணையாக இருப்பார்கள். செலவுகளை சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதலாக உழைக்கவேண்டி வரும்.

கும்பராசி அன்பர்களே!

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

மீனராசி அன்பர்களே!

அனுகூலமான நாள். தந்தைவழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். நீண்டநாள்களாக தொடர்பில் இல்லாத நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசுவது உற்சாகம் தரும். அக்கம்பக்கத்தில் இருப்ப வர்கள் சுமுகமாகப் பழகுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரி களால் பிரச்னை ஏற்படக்கூடும். சிவபெருமானை வழிபடுவது நன்று.

முகநூலில் நாம்