
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் புலிபாய்ந்த கல் பகுதியில்இன்று (3) காலை யானை தாக்கி ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பொன்னுத்துரை ஆனந்தன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஓட்டமாவடி பகுதியில் இருந்து மீன்களை எடுத்துக் கொண்டு புலிபாய்ந்த கல் பகுதிக்கு விற்பனை செய்யச் சென்ற போதே யானை தாக்கி மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.