இன்று (29) பெருந்தொகை கஞ்சாவுடன் 2 பேர் கைது

யாழ்ப்பாணம், பலாலி, அன்ரனிபுரம் பகுதியில் இன்று (29) அதிகாலை பெருந்தொகையான கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, பலாலி, அன்ரனிபுரம் பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் பெருந்தொகையான கஞ்சாவுடன் வாகனம் ஒன்று கடற்படையினரால் மீட்கப்பட்டு அச்சுவேலி பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பாக ஹயஸ் வாகனத்தில் இருந்த மானிப்பாய் மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் 100 கிலோ வரையான கஞ்சா மீட்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்