இன்று (26) மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவிப்பு

தனியார் பஸ் சேவைகள் இன்று  (26) மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக  இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 

தனியார் பஸ்களுக்கு நேற்று (25) டீசல் விநியோகிம் செய்யப்படாமையால் இன்று வெள்ளிக்கிழமை  இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக  இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் இன்று வெள்ளிக்கிழமை வழமை போன்று   இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

மேலும், இன்று (26) வழமை போன்று ரயில்கள் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்