யாழ். – இங்கிலாந்து பல்கலைக்கழங்களின் மருத்துவமுகாம் தருமபுரத்தில்

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடமும்  இங்கிலாந்தின் பேமிகன் பல்கலைக்கழகமும் இணைந்து இன்று (11) மருத்துவமுகாம் ஒன்றை நடார்த்தியிருந்தன.

கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் குறித்த மருத்துவ முகாம் காலை ஆரம்பமானது. இதில் இருதய நோய் தொடர்பில் வடமாகாணத்தில் பத்தாயிரம்  மக்களை சந்தித்து| அவர்களின் உடல்நலன் தொடர்பாக ஆராய்ந்த பொழுது மருத்துவ சிகிச்சை பெறுவதில் ஏற்படும் பல சிக்கல்  தொடர்பாக அறியப்பட்டது.

இதனை தொடர்ந்து, அவ்வாறான இடங்களில் மருத்துவமுகாம்களை மேற்கொள்ளும் நோக்கில் யாழ் பல்கலைக்கழக மதுத்துவபீடமும், இங்கிலாந்து மருத்துவபீடமும் இணைந்து இந்த மருத்துவ முகாமை நடார்த்தியிருந்தன.

சத்திரசிகிச்சை நிபுணர், பொது வைத்திய நிபுணர், சிறுநீரக வைத்திய நிபுணர் வைத்தியர் பாலகோபி , பெண்ணியல்  வைத்திய நிபுணர் ரகுராமன் என பல வைத்தியர்கள் கலத்து மருத்துவ சேவையினை வழங்கினர்.  

பலர் தூரயிடங்களில் இருந்தும் வந்து வைத்திய சேவையினை பெற்றுக்கொண்டனர். யாழ் வைத்திய சாலைக்குச் சென்று பெறவேண்டிய வைத்திய சேவையினை இந்த மருத்துவ சேவையினுடாக பெற்றதாக சிலர் குறிப்பிட்டனர்.  

தொடர்ந்து இவ் மருத்துவசேவை  பின்தங்கிய கிராமங்களுக்கும்  கிடைக்கநடவடிக்கே மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின்  விருப்பமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்