இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது..

பேருந்து முன்னுரிமை ஒழுங்கு வீதிச் சட்டத்தின் மூன்றாம் கட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

காவற்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது.   இதற்கமைய இன்று காலை 6 மணி முதல் கொழும்பு -இங்குருகடை சந்தியிலிருந்து சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, ஆமர் வீதி, மாளிகாவத்தை, மருதானை ஊடாக கொழும்பு கோட்டை வரையில் பேருந்து முன்னுரிமை ஒழுங்கு வீதிச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தனியார், அரச பேருந்துக்கள், 20 ஆசனங்களுக்கும் அதிகமான அலுவலக சேவையில் ஈடுபடும் பேருந்துகள், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் மகிழுர்ந்துகள் என்பன குறித்த வீதிச் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என காவற்துறை தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

முகநூலில் நாம்