இன்று முதல் கோட்டை ரயில் நிலையத்தில் PCR பரிசோதனை

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இன்று காலை முதல் இலவசமாக PCR பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, மாநகர சபை வைத்தியர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்றினால் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இங்கு வைத்திய குழுவினால் நாளாந்தம் 50 PCR பரிசோதனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கோட்டை ரயில் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.ரயில் ஊழியர்கள் மற்றும் ரயில் பயணிகளுக்கு இவ்வாறு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகநூலில் நாம்