இன்று மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி

இன்றயதினம் (மார்ச் 07) நாட்டில் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.

இதற்கமைய, P,Q,R,S,T,U,V,W பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 02 மணி நேர மின்வெட்டும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணித்தியால மின்வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், E & F பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 05 மணி நேர மின்வெட்டும் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை இரண்டரை மணித்தியால மின்வெட்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்