இன்று தாய்வானை சென்றடைந்த அமெரிக்க சபாநாயகர்

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி இன்று காலை தாய்வானை  சென்றடைந்துள்ளார்.

தாய்வான் தொடர்பில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் கடுமையான கருத்து மோதல்கள் இடம்பெற்று வரும் நிலையில்,  நான்சி பெலோசி தாய்வான் விஜயம் அமைந்துள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் கடுமையான எச்சரிக்கைகளை மீறி, அமெரிக்க ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற சபாநாயகர் -நான்சி பெலோசி தாய்வானுக்குச் சென்றுள்ளார்.

குறித்த விஜயத்தின்போது நான்சி பெலோசி நான்கு நாட்கள் தாய்வானில் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்