இன்று கொழும்பில் சில பகுதிகளில் நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 10 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை  தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 05 மற்றும் 06 ஆகிய பகுதிகளில் இன்று சனிக்கிழமை (20) இரவு 11.00 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை (21) காலை 09.00 மணி வரை நீர்வெட்டு  அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கொழும்பு 04 பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும். 

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்