இன்று ஆரம்பமானது-வடக்கின் பெருஞ்சமர்

நூற்றாண்டு தாண்டிய வரலாற்றைக் கொண்ட வடக்கின் பெருஞ்சமர் இன்று ஆரம்பமானது.

யாழ். மத்திய மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 114ஆவது வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி யாழ். மத்தியக்கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.

இலங்கை தேசிய மட்ட கிரிக்கெட் அணிக்காக விளையாடிய வட மாகாணத்தின் முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ள விஜயகாந்த் வியாஷ்காந்தின் தலைமையில் யாழ். மத்திய கல்லூரி களம் காண்கின்றது.

அதேபோல சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் தலைவராக நாகேந்திரராஜா சௌமியன் செயற்படுகிறமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்