இன்றுடன் நிறைவடைகிறது பட்டதாரிகளுக்கான நியமனக்கடிதங்கள் பகிர்ந்தளிப்பு!

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வழங்கும் நியமனக்கடிதங்களை பகிர்ந்தளிக்கும் திட்டம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பட்டதாரிகளுக்கான நியமனங்களுக்காக 70 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் தமக்கு கிடைக்கப்பெற்றதாகவும் அவற்றுள் 56 ஆயிரம் விண்ணப்பங்கள் உரிய தகைமையுடன் பூரணப்படுத்தப்பட்டிருந்தாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

இந்த விண்ணப்ப படிவங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிறுவனங்களால் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக உரிய தகைமைகள் அனைத்தையும் பரீட்சித்ததன் பின்னர் 42 ஆயிரம் விண்ணப்பங்களே அங்கீகரிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறுகின்றது,

இன்று மாலைக்குள் இதன் போது விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்ட அனைவருக்கும் கடிதங்கள் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

இந்த கடிதம் கிடைத்து 03 நாட்களுக்குள் தமது பகுதிக்குரிய பிரதேச செயலாளரை சந்தித்து 07 நாட்களுக்குள் பயிற்சிக்கு சமூகமளிக்காவிடில் இந்த நியமனம் ரத்து செய்யப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு கூறுகின்றது,

அத்துடன் பயிற்சி காலத்தில் 20 ஆயிரம் ரூபா ஊதியமும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்