இனப்பிரச்சினை தொடர்பான பேச்சு: அடுத்த மாதம் கொழும்பில் கூடுகின்றன தமிழ்க் கட்சிகள்

இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பது குறித்து ஆராய அடுத்த
மாதம் தமிழ்க் கட்சிகள் கொழும்பில் கூடவுள்ளன.

அதன்படி எதிர்வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கொழும்பில் இந்த
சந்திப்பு நடைபெறும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை
சேனாதிராஜா தெரிவித்தார்.

கடந்த கலந்துரையாடல் அவசர அவசரமா இடம்பெற்ற நிலையில் இம்முறை அனைவரையும்
அழைத்து கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்