இனப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண சகலரையும் அழைத்தார் ஜனாதிபதி

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக வரவு-செலவுத்
திட்டம் நிறைவடைந்த அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் அனைத்துக்
கட்சிகளும் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற வரவு-செலவுத் திட்டம் மீதான
குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு
அழைப்பு விடுத்தார்.

“அரசாங்கத்தைத் துரத்த இன்னோர் ‘அரகலயா’ ஏற்பாடு செய்யத்
திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் அதற்கு நான் வாய்ப்பளிக்க மாட்டேன்.
இராணுவத்தையும் படைகளையும் பெற்றுக்கொண்டு அவசரச் சட்டம் போடுவேன்..
பொருளாதார நெருக்கடி தீரும் வரை பாராளுமன்றத்தைக் கலைக்க மாட்டேன்
என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்