இனந்தெரியாத நபர்களின் வெறியாட்டம்! நபர் ஒருவர் ஆபத்தான நிலையில்!

பலபிட்டிய, வெலிவத்துகொட பகுதியில் இன்று துப்பாக்கி பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், 36 வயதுடைய சுனில் குமார என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

முகநூலில் நாம்