இந்த விடயத்தில் இலங்கைக்கு 5வது இடம்..!

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழலுக்கான கேந்திர மையம் தெரிவித்துள்ளது.

அண்மையில் கல்கிஸ்ஸை கடற்கரை நிரப்பப்பட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலும் குறித்த கோரிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளதாக அதன் நிறைவேற்று பணிப்பாளர் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.

  இலங்கையில் இது பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.   கடலிலும், கங்கைகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் காணப்படுகின்றன.   கடலில் பிளாஸ்டிக் பொருட்களை கொட்டும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 5 ஆவது இடத்தில் உள்ளதாக உலக வங்கியால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எனவே அரசாங்கம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.   அத்துடன் கல்கிஸ்ஸை கடற்கரை நிரப்பட்டுள்ளமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தாம் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு நீதிமன்றம் ஊடாக சிறந்த தீர்வு கிடைக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக சுற்றுச்சூழலுக்கான கேந்திர மையத்தின்  நிறைவேற்று பணிப்பாளர் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்