இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்மித், வார்னர் குறித்து கவலைப்படக் கூடாது: கவுதம் கம்பிர்!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியபோது தொடரை 2-1 எனக்கைப்பற்றி சாதனைப் படைத்தது. அதன்பின் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கிறது. தற்போது ஸ்மித், வார்னர் அணியில் இருப்பதால் சவாலானதாக இருக்கும் என கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்மித், வார்னர் குறித்து கவலைப்படக்கூடாது என்று கம்பிர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கம்பிர் கூறுகையில் ‘‘இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் எந்த அணிக்கு எதிராகவும், எந்த சூழ்நிலையிலும் சவால் கொடுக்கக் கூடியவர்கள். கடந்த முறை வெற்றி பெற்ற அணியோடு நாம் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும்போது, போட்டியை நடத்தும் அணிக்கு மிகவும் சவலாக இருப்போம் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’’ என்றார்.

முகநூலில் நாம்