இந்திய மத்திய வங்கி இலங்கையுடன் 400 மில்லியன் டொலரை பரிமாற்றிக்கொள்ளும் ஆவணத்தில் கையொப்பம்!

இந்திய மத்திய வங்கி இலங்கையுடன் 400 மில்லியன் டொலர் நிதியை 2022 நவம்பர் வரையான காலப்பகுதி வரை பரிமாற்றிக்கொள்ளும் ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கடனுதவி கோரி இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய, நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த ஆவணம் கைச்சாத்திடப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

முகநூலில் நாம்