இந்திய அணியுடன் கடைசி டெஸ்ட் போட்டி டேவிட் வார்னர் 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னர் விலகியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அவுஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1 – 2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2 – 1 என வென்றுள்ளது.

டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

இந்நிலையில் காயம் காரணமாக ஒருநாள், டி20 தொடர்களில் இருந்து விலகியிருந்த வார்னர், தற்போது முதல் டெஸ்டிலிருந்தும் விலகியுள்ளார். இதனால் அடிலெய்டில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்டில் வார்னருக்குப் பதிலாகப் புதிய தொடக்க வீரரைக் களமிறக்க வேண்டிய நிலையில் அவுஸ்திரேலிய அணி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்