
இந்தியா சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.இதில் முதல் போட்டியில் இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில், இறுதியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி இன்று புனேவில் துவங்கி நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஹார்திக் பாண்டியா, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
டாஸ் வென்றப் பிறகு பேசிய ஹார்திக் பாண்டியா, ”முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளோம். பனியின் தாக்கம் இருக்கும் என்பதால், இந்த முடிவினை எடுத்துள்ளோம். இன்று ராகுல் திரிபாதி அறிமுக போட்டியில் விளையாட உள்ளார். அதேபோல், அர்ஷ்தீப் சிங்கும் இன்று களமிறங்க உள்ளார்” எனக் கூறினார்.
பிட்சில் வேகப்பந்து வீச்சாளர்களால் ஓரளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியும். மேலும், முதலில் களமிறங்கும் அணியால் பெரிய ஸ்கோரும் அடிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.