இந்தியா பா.ஜ.க தொண்டர்கள் மூவர்  சுட்டு கொலை!

ஜம்மு-காஷ்மீா் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பா.ஜ.க தொண்டர்கள் மூவர் பயங்கரவாதிகளால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸார், “ பா.ஜ.கவின் ஃபிதா ஹுசேன்,  உமா் ஹஜாம் மற்றும் உமா் ரஷீத் பேக் ஆகிய 3 பேரையும் குல்காம் மாவட்டம் ஒய்.கே.போரா பகுதியில்  பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனா்.

இதன்போது படுகாயம் அடைந்த மூன்று பேரையும் வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்றோம். அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் மூன்று பேரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினா்” எனத் தெரிவித்துள்ளார்.

லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய டிஆா்எப் பயங்கரவாத அமைப்பு இந்த தாக்தலுக்கு பொறுப்பேற்றுள்ளது. டிஆா்எப் அமைப்பு இதுபோல் தாக்குதல் நடத்துவோம் என சமூக வலைதளத்தில் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பாஜக தொண்டா்கள் மற்றும் தலைவா்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனா். இந்த தாக்குதலில் பாஜகவைச் சோ்ந்த 8 போ் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்