இந்தியா, சீனாவுக்கு இங்கிலாந்து பிரதமர் வேண்டுகோள்!

இங்கிலாந்து பாராளுமன்றத்தில், இந்தியா-சீனா இடையிலான மோதலால் இங்கிலாந்து நலனுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பழமைவாத கட்சி உறுப்பினர் பிலிக் டிரம்மண்ட் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:-

லடாக்கில் உள்ள சூழ்நிலை மிகவும் தீவிரமான, கவலைக்குரிய அம்சமாகும். இதை இங்கிலாந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. எல்லை பிரச்சனையை தீர்க்க இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்துவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகநூலில் நாம்