இந்தியா, அமெரிக்க சிறப்புப் படைகள் மூன்று வார கூட்டுப்பயிற்சி

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மையப்படுத்தி இந்தியா மற்றும் அமெரிக்காவின் சிறப்புப் படைகள் மூன்று வார கூட்டு பயிற்சியை இமாச்சல பிரதேசத்தின் பக்லோவில் முன்னெடுத்துள்ளது.

தற்போதைய உலகளாவிய சூழ்நிலையின் பின்னணியில் இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்களின் அடிப்படையில் இந்த பயிற்சி முக்கியமானது என்று இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் வொஷிங்டனில் உள்ள ஜாயின்ட் பேஸ் லூயிஸ் மெக் கார்டில் இதே போன்றதொரு கூட்டுப்பயிற்சி நடத்தப்பட்டது. 

மேலும் இந்த பயிற்சியில் இரு தரப்பினரும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கீழ் கூட்டு சூழலில் வான்வழி நடவடிக்கைகள், சிறப்பு நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகளை மேற்கொண்டனர்.

பயிற்சி இரண்டு கட்டங்களில் நடத்தப்பட்டது. முதல் கட்டத்தில் போர் தந்திரோபாய நிலை சிறப்பு பணி பயிற்சிகள் மற்றும் இரண்டாம் கட்டத்தில் முதல் கட்டத்தில் இரு குழுக்கள் பெற்ற பயிற்சியின் 48 மணிநேர சரிபார்ப்பும் அடங்கும்.

மலைப்பாங்கான நிலப்பரப்பில் உருவகப்படுத்தப்பட்ட வழக்கமான மற்றும் வழக்கத்திற்கு மாறான காட்சிகளில் கூட்டுப் பயிற்சி, திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றைக் கூட்டாக முன்னெடுக்கப்படும். 

இந்தப் பயிற்சியானது இரு நாடுகளின் சிறப்புப் படைகளுக்கு இடையேயான பாரம்பரிய நட்புறவை மேலும் வலுப்படுத்தி இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்