இந்தியாவுடன் மோத அவுஸ்ரேலிய   டெஸ்ட் அணி அறிவிப்பு! 

இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், எதிர்பார்ப்பு மிக்க அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எதிர்பார்ப்பு மிக்க அணியில் இளம் வீரர்களான வில் புகோவ்ஸ்கி மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை பெறுகின்றனர்.

அத்துடன் சீன் அபோட், மிட்செல் ஸ்வெப்சன் மற்றும் மைக்கேல் நேசர் ஆகியோர் சர்வதேச டெஸ்ட் அறிமுகத்தை பெறுகின்றனர்.

டிம் பெயின் அணித்தலைவராக நீடிக்கின்ற நிலையில், பெட் கம்மின்ஸ் துணைத்தலைவராக செயற்படுவார் என கிரிக்கெட் அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.
சரி தற்போது அணியின் முழுமையான விபரத்தை பார்க்கலாம்.

டிம் பெயின் தலைமையிலான அணியில், சீன் அபோட், ஜோ பர்ன்ஸ், பெட் கம்மின்ஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபூசாக்னே, நாதன் லியோன், மைக்கேல் நேசர், ஜேம்ஸ் பாட்டின்சன், வில் புகோவ்ஸ்கி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், மத்தேயு வேட், டேவிட் வோர்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அவுஸ்ரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள், மூன்று ரி-20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் நவம்பவர் 27ஆம் திகதி சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 17ஆம் திகதி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்