
உத்தரப்பிரதேசத்தின் இரு இடங்களில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து வெளியான அறிக்கையில்,
20 ஆண்டுகள் தேடலுக்கு பிறகு மத்திய மற்றும் மாநில சுரங்கத்துறை இயக்குநரகம் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில் சோன்பத்ரா மற்றும் ஹர்தி ஆகிய இடங்களில் தங்கச் சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில் சோன் பஹாதியி மற்றும் ஹர்தி பகுதியில் நிறைய தங்கம் இருக்க வாய்ப்புள்ளது.
இந்த மதிப்புமிக்க தங்க சுரங்கத்தை ஏலம் விட அரசு முடிவு செய்துள்ளது.
எல்லா நடைமுறைகளும் முழுமையாக முடிந்த பின், இணைய வழி ஏல நடவடிக்கைகளை கவனிக்க உள்ளார்களாம். இந்த சுரங்கத்தில் தங்கம் மட்டும் அல்லாது யுரேனியம் போன்ற அரிய தாதுக்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்திரபிரதேசத்தின் புண்டேல்கண்ட் மற்றும் விந்தியன் மாவட்டங்களில் இன்னும் வேறு என்ன மாதிரியான உலோகங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன என ஆராய்ந்து வருகிறார்களாம்.