இந்தியாவில் நுழைந்தது கொரோனா வைரஸ்: சீனாவில் இருந்து வந்த கேரள மாணவர் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹானிலுள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வரும் கேரளாவை சேர்ந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கேரளாவிலுள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்த மாணவரின் உடல்நிலை சீராக உள்ளதாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்ட நோவல் கொரோனா வைரஸின் தாக்கம், படிப்படியாக அந்நாடு முழுவதும் மட்டுமின்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவிய நிலையில் தற்போது முதல் முறையாக இந்தியாவிலும் அதன் தாக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

முகநூலில் நாம்