இந்தியாவில் உள்நாட்டில் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கோதுமை மா ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு

இந்தியா உள்நாட்டில் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கவுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உள்நாட்டு சந்தையில் கோதுமையின் விலை கடுமையாக அதிகரித்தது. 

இதனால் உள்நாட்டு சந்தையில் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. 

இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கோதுமைக்கான தேவை அதிகரித்ததால், இந்தியாவின் கோதுமை மா ஏற்றுமதி 200 சதவீதம் அதிகரித்தது.  மேலும் உள்நாட்டு சந்தையில் கோதுமை மா விலையும் கணிசமாக உயரத் தொடங்கியது. 

இதனை கட்டுப்படுத்தும் விதமாக கோதுமை மாவு ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இதன் மூலம் நலிவடைந்த தன் நாட்டு மக்களுக்கு உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்