
இந்தியாவிற்கு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் தலைமன்னாரில் ஐவர் கைது
சட்டவிரோதமாக இந்தியாவிற்கு செல்ல சிலர் தயாராக இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய நேற்று(17) கடற்படையினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, 03 ஆண்களும் 02 பெண்களும் கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பேசாலை, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை சேர்ந்த இவர்கள் இன்று(18) மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.