
இந்தியாவிற்கான எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இலங்கைக்கான பாதுகாப்பு
அச்சுறுத்தல் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்தமொராகொட டைம்ஸ்
ஒவ் இந்தியாவிற்கு தெரிவித்துள்ளார்.
இரு தரப்பு உடன்படிக்கை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில்
இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் இலங்கையின்
துறைமுகங்களை வெளிநாடு பயன்படுத்துவதற்கு இலங்கை அனுமதிக்காது என்ற
உத்தரவாதத்தை இந்தியாவிற்கு வழங்க முயற்சித்துள்ள மிலிந்த மொராகொட இதனை
தெரிவித்துள்ளார்.
எங்கள் பாதுகாப்பு கரிசனைகளும் இதனடிப்படையில் உள்ளன.இந்தியாவின்
பாதுகாப்பிற்கு எது ஆபத்தானதோ அது எங்களிற்கும் ஆபத்து என நாங்கள்
நம்புகின்றோம் இந்தியாவும் அவ்வாறே கருதுகின்றது என நாங்கள்
கருதுகின்றோம் என மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளா